ஈரான் – அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் செய்ய முயற்சிக்கும் கத்தார்!

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்த தாங்கள் மீண்டும் முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்த தங்கள் நாடு முயற்சி மேற்கொண்டு வருவதாக, கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்-தானி தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

பிபிசி உருது செய்திப்படி, ஈரான் தற்போது தீவிரமாக யுரேனியத்தை செறிவூட்டவில்லை என, சர்வதேச அணுசக்தி முகமை பொது இயக்குநர் ரஃபேல் கிராசி தெரிவித்துள்ளார்.

எனினும், அவரது கூற்றுப்படி இரானின் யுரேனியம் செறிவூட்டல் மையத்துக்கு அருகே சில நடவடிக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்தாண்டு ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே மறைமுக பேச்சுவார்த்தை தொடர்பாக ஓமன் மத்தியஸ்தம் செய்தது.

இதுவரை, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஐந்து கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. ஆனால், 12 நாள் போரின் போது இஸ்ரேல் மற்றும் அதைத்தொடர்ந்து அமெரிக்கா இரானை தாக்கியதை அடுத்து, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை டெஹ்ரான் ரத்து செய்தது.

அமெரிக்கா தாக்குதலுக்கு எதிர்வினையாக, கத்தாரில் உள்ள அமெரிக்காவின் வான் தளத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது, இதற்கு கத்தார் பாதுகாப்பு கவுன்சிலில் எதிர்ப்பு தெரிவித்தது.