மகாநாசத்துக்கும் மகாவம்சமே காரணம் என்கிறோம் ஏன்? : என்.சரவணன்

மகாவம்சம் என்பது மிகவும் எளிதாக படித்து விளங்கக்கூடிய  நூல் அல்ல, அது எங்களுக்கு தெரியும். மகாவம்சம்வெறும் புத்தகம் மட்டும் அல்ல; அது சிங்கள சமூகத்தில், சமூகத் தொடர்பில், ஒரு பௌத்த புனித நூலாகமதிக்கப்படுகிறது. இதன் பதிப்பு இலங்கைக்கு மட்டுமல்ல; அது பல நாடுகளில் மொழிபெயர்க்கப்பட்டு வந்துள்ளது. தமிழில் பெரும்பாலும் மொழிபெயர்ப்பு செய்யப் படவில்லை.  இருந்தாலும் அதுவும் சரியான வடி வில் கிடைக்கவில்லை.
உலகின் பல நாடுகள்—கம்போடியா, இந்தியா, தாய்லாந்து போன்றவை—மகாவம்சத்தை பௌத்த புனித நூலாக கருதிமொழிபெயர்த்து வருகின்றன. இலங்கையின் நிலைப்பாட்டில், 2600 ஆண்டுகளாக தொடர்ச்சியாக எழுதப்பட்ட வரலாற்றுப் பதிவாக இதை பார்க்கலாம்.
இன்றைய அரசாங்கம் 1956 ஆம் ஆண்டில் முதல் மூன்று தொகுதிகளையும் பூர்த்தி செய்ய ஆரம்பித்தது. அதாவது, முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகள் தனிநபர்கள்,   பௌத்த துறவிகள் எழுதியவையாகஇருந்தாலும், 1956 முதல் கடைசி தொகுதிகள் அரசாங்கத்தின் பொறுப்பில் வந்துள்ளன. இதன் முக்கியத்துவம் இதிலேயே வெளிப்படுகிறது.
முதலாவது தொகுதி, மானாம தேரனுடைய தொகுதி, இது மிகவும் சர்ச்சைக்குரியதாகும். ஏனெ னில், ஐந்தாம்நூற்றாண்டில் மகாவம்சம் எழுதும் போது, ஆசிரியருக்கு கிடைத்த மூலங்களும், வாய்மொழியாக கடத்தப்பட்டகதைகளும், பிக்குமார்க ளின் மரபுப் பதிவுகளும், கலாச்சார சான்றுகளும் அடிப்படையாக பயன்படுத்தப்பட் டன. இவைஅனைத்தும் சேர்க்கப்பட்டு உருவாக் கப்பட்ட நூல்தான் மகாவம்சம்.
மூல நூல்களில் ஒன்று “சிகல அட்டகத்தா” என குறிப்பிடப்படுகிறது, ஆனால்   அது கண்டு பிடிக்கப்படவில்லை. பல இலக்கியங்களிலும் சிகல அட்டகத்தாவைப் பற்றி குறிப்புகள் உள்ளன. இதன் அடிப்படையில் மகாவம்சம்உருவானதாக நம்பப்படுகிறது. எனவே, இதன் உள்ளடக்கம் சில கற்பனையான கதைகளையும், மறுபடியும் தொல்லியல்ரீதியிலும் பூர்வீகச் சான்றுகளையும் கொண்டதாகவே பார்க்கப்படுகிறது.
முதலாவது தொகுதியில் உள்ள பல விவ ரங்கள் இன்றைய தொல்லியல் ஆய்வுகளால்சா ன்றளிக்கப்படவில்லை. இதைசிங்கள ஆய்வா ளர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். எனவே “சிங்கத்துக்கு பிறந்தவர்கள்” என்ற கதை கூட, இன்று ஆய்வாளர்கள் அல்லது சிங்கள சமூகத்திற்குமிகப்பெரிய அவமானமாகத் தெரிகிறது. அதே நேரத்தில், இதை முழுமையாக ஒட்டுமொத்த புனைவாகக் கொள்ளும்அபாயமும் உள்ளது.
ஆனால், பலர் இதை மறுக்கின்றனர். இது ஒரு புனைவாக மட்டுமே வந்ததாக அவர்கள் கருதுகின்றனர். ஆனால், அந்தபுனைவை விட்டு நம்மால் பார்க்க வேண்டியது முக்கியம் என்று சொல்வோரும்  உள்ளனர்.
இன்றைக்கு, இதை ஏற்றுக்கொள்வோர் குறைவாக இருக்கின்றனர். ஆனால், சில சமயங்களில், சாமானியர்கள் இதைஏற்றுக்கொள் ளச் செய்கின்றனர், நீங்கள் சொன்ன கதைகளின் அடிப்படையில். முக்கியமாக, இந்த மகாவம் சத்தை புறக்கணிக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.   இதை  இலகுவாகப் புறக்கணிக்க முடியாது.
ஏனென்றால், மகாவம்சத்தில் இலங்கையு டன் தொடர்புடைய பிற்காலத் தகவல் களை கண்டறிய உதவும் பல சரித்திர உண்மைகள் நிறைந்துள்ளன. பல மன்னர்கள், அவர்களால் கட்டப்பட்ட கோட்டைகள், விகா ரைகள், செய்த பணிகள்  இதில் உறுதிப் படுத்தப் படுகின்றன.
மேலும், பிற்கால தொல்லியல் கண்டுபிடிப் புகளுடன் பொருந்தும் தகவல்களும் இதில் உள்ளன. அதே நேரத்தில், பலபுனைவு கதைகளும் சேர்ந்து உள்ளன. கைகர் மொழிபெயர்ப்பாளர் இதைப் பற்றி சொல்லும்போது, மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால், “இதில் எதுஉண்மை, எது பொய்” என்பதை அடையாளம் காண்வது மிகவும் கடினம் என்று கூறுகிறார். இதுவே கைகரின் மகாவம்சமொழிபெயர்ப்பில் குறிப்பிடப்பட்ட முக்கியம்.   இதே உலகம் முழுவதும் ஏற்றுக்கொள் கிற  ஒரு கருத்து ஆகும்.
இப்போது, “புத்தர் மூன்று முறை இலங்கை வந்தார்” என்று கூறப்படுகிறது. அந்த மூன்று வருகைகளையும் பற்றிய பலஇலக்கியங்கள், பௌத்த இலக்கியங்கள், கதைகள் மற்றும் பெரிய புராணங்கள் உள்ளன.
அதே நேரத்தில், வேறு ஆய்வுகள் சொல்வ தென்றால், “புத்தர் ஒருமுறை கூட இலங்கை வந்திருக்கவில்லை” என்கின்றன. உண்மையில், தொல்லியல் ஆய்வுகளில் இதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
பேராசிரியர் பரணவிதானின் ஆய்வுகள் குறிப்பிடத்தக்கவை. அவர் இலங்கையில் மிகவும் புகழ்பெற்ற சிங்களதொல்லியல் அறிஞர். அவர்   புத்தர் மூன்று முறை இலங்கை வந்ததாக ஆதாரங்கள் இல்லை. எனக்கூறுகின்றார். இந்தகருத்துக்காக பல இடங்களில் அவர் நிராகரிக்கப்படுகின்றார், ஆனால் அவர் உறுதியுடன் கூறியுள்ளார்.
இன்றைக்கும் பலரும் இதே கருத்தை பகிர்கின்றனர். இது போன்ற பல சிக்கல்கள்  உள்ளது, அதில் “சிங்கத்துக்குபிறந்தவர்கள்” என்ற புனைவுகளும் அடங்கும்.
அதே நேரத்தில், எங்களை பாதிக்கிற முக்கியமான சிக்கல் என்னவென்றால், அது “தம்மதீப கருத்தாக்கம்” ஆகும்.
தம்மதீப கருத்தாக்கம்   என்னவென்றால், புத்தர் பிறந்த நாள், புத்தர் இறந்த நாள் (பரிநிர்வாணம் அடைந்த நாள்), மற்றும் விஜயன் 700 தோழர்களுடன் இலங்கைக்கு வந்த நாள்— அனைத்தும்  ஒன்று.
அந்த விசாக பௌர்ணமி நாள், மிக முக்கியமான நாள். இன்று இலங்கையில் விசாக் தினம் கொண்டாடப்படுவது, புத்தரின் இறப்பு நாளோடு மட்டுமல்ல, அதே நாளில் அவரின் பிறந்த நாளும் சேர்ந்து கொண்டாடப்படுவ தால்முக்கியத்துவம் பெற்றது. அவருடைய பிறந்த நாள், இறந்த நாள், மற்றும் இடம்  இவை இணைந்து, இலங்கையில்சிங்கள இனம்  தோன்றி யதை குறிக்கின்றன.
விஜயன் இலங்கைக்கு வந்ததாக சொல் லப்படுகின்றது. ஆய்வுகளின் ரீதியாக, சிலர் விஜயன் வரவில்லை என்றும்கூறுகின்றனர். இதற் கான தொல்லியல் ஆதாரங்களும் இல்லை.
பொதுவாக, ஒருவர் “ஏதாவது தொல்லியல் சான்றுகளைக்கேட்டால்  அதற்கு மேலாக எந்த விதமான  விவாதமும் இல்லாமல் போகும். அதே போல, புத்தரின்  உயிர் போய்க் கொண்டிருந்த நாளில், விஷ்ணு பகவானுக்கூடாக ஒரு  செய்தி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அந்த செய்தி என்னவென்றால், “இலங்கை தீவில் தான் அடுத்த வருகின்ற  5000 ஆண்டுகளுக்கு தனது பௌதம் பேணப்படப்போகின்றது, அதைக் காப்பாற்று கின்ற பொறுப்பை மக்களுக்குவழங்குகிறது” என சொல்லப்படுகிறது.
இந்த பொறுப்பு யாருக்கு? விஜயன் உள்ளிட்ட சிங்கள மக்களுக்கு. எனவே இதன் அடிப்படையில் தான், இந்தகருத்தைக்.  கொண்டு, ஒட்டுமொத்த இலங்கையையும் நாசப்படுத்தும் சூழல் உருவாக்கப்பட்டது.
மதத்தின் பெயரில் எந்த கருத்தையும் புனிதப்படுத்தி, மக்கள் அதில் ஈடுபாடு காட்டும் திறன் உலகம் முழுவதும் எல்லாமதங்களுக்கும் காணப்படுகிறது.
எனவே, இது  இலகுவாக, பௌத்தத்தின் பெயரால், அதாவது புத்தரின் பெய ரால், “அவர் சொன்னார், அடுத்த 5000 ஆண்டுகளுக்கு   பௌத் தத்தை பாதுகாக்க வேண்டும்” என்ற பொறுப்பு சிங்கள  மக்களுக்கும்   சிங்களபௌத்தர்களுக்கும் ஒப்படைக்கப் பட்டுள்ளது என சிங்கள மக்கள் நம்புகின்றனர். இதனால், இந்த தீவில் மட்டும் சிங்கள பௌத்தர்கள் வாழ்கிறார்கள்;  எனவே இந்த தீவை விட்டு சிங்களவர்கள் வெளியே செல்ல முடியாது. எனவே  “நாங்கள் இந்த தீவை பாதுகாக்கவேண்டும், அதை எப்போதும்பாதுகாக்க வேண்டும்” என் பதே அவர்களின் அடிப்படை கருத்தாகும். ஆக,  மகாவம்சத்தின் பெயரில்  மகாநாசத்திற்காக அடி கோலி விட்டார்கள்.  அதுதான் உண்மை.
இந்த “தம்மதீப கருத்தாக்கம்” என்ற  கருத் தாக்கத்தையும் இதை வைத்துக்கொண்டுதான்  விளக்குகிறோம். அதற்குள், “பௌத்தத்தை  பாது காப்பது, எங்களுடைய பொறுப்பு, எங்களுடைய கடமை” என்ற கருத்து இருக்கிறது.
ஆனால், இந்த கருத்தை வைத்து அரசர்களை அல்லது மகாவம்சத்தை பயன்படுத்தி ஏதாவது செய்ததாக நமக்கு எந்தசான்றுகளும் இல்லை. இலக்கிய ஆதாரங்களும் கிடைக்கவில்லை. ஏனென்றால், மகாவம்சம் எப்போதோ எழுதப்பட்டிருந்தாலும், அதுபோன்ற ஆதாரங்கள் காணாமல் போய்விட்டது. உள்ளே இருந்த எதுவும் யாருக்கும் தெரியாமல் அழிந்து போய்விட்டது.
பிறகு, 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஜான்ஸ்டன் அதை கண்டுபிடித்தார். பின்னர் அதை பிரான்ஸ் அனுப்பி முதல்மொழிபெயர்ப்பு லத்தீனில் செய்யப்பட்டது. பின்னர் பிழைகள் கண்டறியப்பட்டு, பலர் தொடர்ந்து முயற்சி செய்தனர். இறுதியாக, 1912 ஆம் ஆண்டு கைகரின் மொழிபெயர்ப்பை ஏற்றுக்கொண்டு ஒரு நிலை யான மொழிபெயர்ப்புஉருவானது.
கைகரின் மொழிபெயர்ப்புக்குப் பிறகும் பல சிங்கள அறிஞர்கள் அதே மொழிபெயர்ப்பை அடிப்படையாகப் பயன்படுத்தி பல மாற்றங்கள் செய்துள்ளனர். பிறகு, அவர்கள் திரும்பி பாளி மொழியில் மொழிபெயர்த்து மகாவம்சத்தை பிற்காலத்தில் கொண்டு வந்துள்ளனர்.
இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், மகாவம்சம் தமிழர்களுக்கு மறுக்கப்பட்டு வந்தது. உண்மையில், 1956 ஆம்ஆண்டு  சிங்கள மொழி மட்டுமே சட்டமாக்கப்பட்டது. அப்போது, “ஆங்கிலத்தினுடைய ஏக போகத்தை தவிர்க்க, இந்த நாட்டின் சுதேசிய மொழியை கொண்டு வருகிறோம்” என்று எஸ்டிஆர்டி பண்டார் நாயக்க உட்பட பலர் கூறினாலும், பதிலாக சிங்களத்தை மட்டும் அரசு நிறுவியது. பிறகுஏற்பட்ட சர்ச்சைகளால், “சிங்களமும் தமிழும்” என்ற நிலை உருவானது.
இதிலிருந்து ஒரு மரபு உருவானது: தமிழிலும், சிங்களத்திலும் அனைத்து சட்டங்க ளையும், அரச வெளியீடுகளையும் மொழி பெயர்க்கும் மரபு இருக்கின்றது. ஆனால், எல்லா வற்றையும் முழுமையாக செய்யவில்லை. அதே போல், மகாவம்சத்தையும் அரசு இதுவரை தமிழில் மொழிபெயர்க்கவில்லை.