மீண்டும் போர், காசா மீது தாக்குதலுக்கு உத்தரவிட்ட நெதன்யாகு…

பாலஸ்தீனப் பகுதியில் ஹமாஸ் போராளிக் குழு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டியதுடன், “சக்திவாய்ந்த தாக்குதல்களை” நடத்த இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து நேற்று காசா நகரத்தின் மீது இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளன.

வடக்கு காசாவில் உள்ள மிகப்பெரிய செயல்ப்பாட்டு மருத்துவமனையான ஷிஃபா மருத்துவமனைக்கு அருகிலுள்ள பகுதியை இஸ்ரேலிய தாக்குதல்கள் குறிவைத்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாக்குதலில் உயிரிழந்தவர்கள் தொடர்பான எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

மூன்று வாரங்களாக நீடித்து வரும் பலவீனமான போர் நிறுத்தத்தில் சமீபத்திய வன்முறையாகக் கருதப்படும் இந்தத் தாக்குதல்கள் குறித்து இஸ்ரேலிய இராணுவம் உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.