தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஏதேச்சாதிகாரப் பயணத்தைக் கண்டித்தும், மக்களுக்கான ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் கூட்டாக போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளன.
இது தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்தும் பிரமாண்ட கூட்டத்தை எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு கொழும்பில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கொழும்பில் இன்று (27) ஊடகச் சந்திப்பை நடத்தின.
இதன்போதே முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில குறித்த தகவலை வெளியிட்டார். மக்களின் வாழும் உரிமையைப் பாதுகாக்க வேண்டும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என நினைப்பவர்கள் நிச்சயம் இக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் உதய கம்மன்பில அழைப்பு விடுத்தார்.
2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வி அடைந்த பின்னர், மஹிந்த சூறாவளி எனும் பிரச்சாரம் நுகேகொடையில் இருந்தே ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.



