மைத்திரியின் மனு தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு…

உலகை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட மனுவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான எச்சரிக்கையை புறக்கணித்து அதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக அருட்தந்தை சிறில் காமினி மற்றும் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களால் கோட்டை நீதவான் நீதிமன்றில் தனிப்பட்ட மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அருட்தந்தை சிறில் காமினி மற்றும் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட மனுவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரியே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அவ்வாறு மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.