மெரிக்க வரிகளின் தாக்கத்திலிருந்து விடுபட இலங்கை உட்பட ஆசிய நாடுகள் தடைகளை குறைக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், பிராந்திய வர்த்தகத்தை ஒன்றிணைக்க வேண்டும் எனவும் குறித்த நிதியம் கோரியுள்ளது.
உலகெங்கிலும் உள்ள பொருட்கள் உற்பத்திக்கான விநியோகச் சங்கிலி மையமாக சீனா உள்ளதால், ஆசியாவின் பொருளாதார வளர்ச்சியில் சீனா வர்த்தகம் மையமாக கருதப்படுகின்றது.
இந்தநிலையில், சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தக போர், இலங்கை உட்பட்ட ஏனைய ஆசிய நாடுகளை பாதிப்பதாக சர்வதேச நாணய நிதியம் சுட்க்காட்டியுள்ளது.



