கண்டி, பதுளை, குருணாகல், காலி உட்பட நாட்டில் ஆறு மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் 2, 052 குடும்பங்களைச் சேர்ந்த 8,346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (21) மதியம் வெளியிட்டுள்ள நாளாந்த நிலைவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் மற்றும் மண்சரிவால் 335 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
அதேவேளை, மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.