உலகளாவிய மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாளை புதன்கிழமை (22) இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணிய வேண்டும் என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன பாராளுமன்றத்தில் இன்று (21) அறிவித்துள்ளார்.
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நாளை அனைத்து உறுப்பினர்களுக்கும் உறுப்பினர் நுழைவாயிலில் ஒரு சின்னத்தை விநியோகிக்க ஏற்பாடு செய்துள்ளதாக, பாராளுமன்றத்தின் தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.