இந்தியா வழங்கிய அரசியல் அதிகாரத்தை இலங்கை அரசாங்கம் முடக்குவதாக தயான் ஜயதிலக்க தெரிவிப்பு

40ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா, வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்காகத் திறந்துவிட்ட மாகாண அரசியல் வெளியை அரசாங்கம் முடக்குவதாக கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்ச்சியாக தாமதிக்கப்பட்டு வரும் நிலைமை தொடர்பில் தனியார் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம், அரசியல் அதிகாரப் பரவலாக்கல் குறித்த தனது உறுதிப்பாடுகளை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுப்பதாக குறிப்பிட்டுள்ளது.

அது நல்லிணக்கம் மற்றும் மக்கள் அனைவரும் மனித உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதற்கு வழிவகுக்கும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.  மாகாண சபைத்தேர்தல்களை நடத்தவும் அத்தேர்தல் தடைப்பட்டிருப்பதற்கு காரணமாக இருக்கும் சட்ட விடயத்தினை தீர்க்கவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

அரசியல் ரீதியாக மிகவும் விலையுயர்ந்ததாகவும், சர்வதேச ரீதியாக அழுத்தங்கள் ஏற்படுத்தக்கூடிய போர்க்காலப் பொறுப்புக்கூறல் பிரச்சினைகளில் காணப்படுகின்ற நெருக்கடிகளை குறைப்பதற்கு மாகாண சபைத் தேர்தல் அதுவழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.