கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் : பிரதமர்

இந்திய – இலங்கை கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக, இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

3 நாள் பயணமாக இந்தியா சென்றிருந்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, டெல்லியில் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையின் வடபகுதி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும், இந்திய கடற்றொழிலாளர்களின் அடித்தள இழுவை மீன்பிடிப்பு முறை மிகவும் கவலையளிப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இந்தப் பிரச்சினைக்கு இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வை காண உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, தற்போது நாடு திரும்பியுள்ளார்.

பிரதமர் தனது விஜயத்தின் போது, ​​இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நாட்டின் உயர்மட்டத் தலைவர்களுடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.