இந்தியாவுக்குச் செல்கிறார் பிரதமர் : மோடியுடனும் சந்திப்பு

பிரதமர் ஹரிணி அமரசூரிய, சீனாவுக்கான தனது பயணத்தை நிறைவுசெய்து இன்று இந்தியாவுக்குச் செல்லவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று, நாளை, நாளைமறுதினம் என மூன்று தினங்கள் கொண்டதாக பிரதமர் ஹரிணியின் இந்தியப் பயணம் அமையவுள்ளது. இந்தப் பயணத்தின் போது, இந்தியப் பிரதமர் மோடி, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை பிரதமர் ஹரிணி சந்தித்துக் கலந்துரையாடல் நடத்துவார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

சிந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஏற்பாட்டில், இந்தியாவில் நாளையும், நாளைமறுதினமும் சிறப்பு உச்சிமாநாடு ஒன்று நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில்,’நிச்சயமற்ற காலங்களில் ஏற்படும் மாற்றங்களை வழிநடத்தல்’ என்ற தலைப்பில் பிரதமர் ஹரிணி சிறப்புரை ஆற்றவுள்ளார் என்றும் கூறப்படுகின்றது. சீனப்பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியாவுக்குச் செல்வதால், பிரதமரின் இந்தியப் பயணம் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.