இலங்கைக்கான பயண ஆலோசனைகளை புதுப்பித்தது அமெரிக்கா!

இலங்கைக்கான பயண ஆலோசனைகளை அமெரிக்கா புதுப்பித்துள்ளது. இதன்படி, இலங்கையில் தற்போது அகற்றப்படும் கண்ணி வெடிகள் மற்றும் அமைதியின்மை தொடர்பில் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம்.
சுற்றுலாப் பிரதேசங்கள் வானூர்தி நிலையங்கள் மற்றும் ஏனைய முக்கியமான பகுதிகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படலாம்.

உள்நாட்டுப் போரில் புதையுண்ட கண்ணிவெடிகள் வெடிக்காத நிலையில் தற்போது கண்டெடுக்கப்படுகின்றன. எனவே, அவை குறித்தும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கை அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் அமெரிக்கா, தமது நாட்டவர்களுக்கு வெளியிட்டுள்ள பயண ஆலோசனையில் கோரியுள்ளது.