மன்னார் தீவில் கனிய மணல் அகழ்வுத் திட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் நீதி மையம் உள்ளிட்ட மூன்று தரப்புகள், மன்னார் பகுதியில் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட உரிமத்தை இடைநிறுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளன.
பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன மற்றும் நீதியரசர் சம்பத் அபயகோன் ஆகியோர் அடங்கிய ஆயம் முன்னிலையில் இன்று (13) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது நீதியரசர்கள் ஆயம், எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி இந்த மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்காக திகதியிட்டு ஒத்திவைத்தது.
மனுதாரர்களால் குறிப்பிடப்படும் வலயங்கள் மன்னார் தீவின் முக்கிய கரையோரப் பகுதிகளை உள்ளடக்கியதாகக் கூறப்படுகிறது. மனுதாரர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரேயுடன் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தார்.