எல்லைநிர்ணயம்-“ஏக்கியஇராச்சிய” காலத்தை இழுத்தடிக்கும் கருவிகள் – பா. அரியநேத்திரன்

இலங்கை அரசியலில் சமகாலத்தில் பேசப்படும் இரண்டு சொற்களும் மிக அவசியமானதும் மிக தூரத்தில் காலத்தை கடத்தும் ஆட்சியாளர்ளுக்கான சூத்திரமாவும் கருத முடிகிறது.
மாகாணச்சபை தேர்தல் அடுத்த ஆண்டு 2026, ல் நடத்தப்படும் என்று கடந்த 09/10/2025, ல் நீதி அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் கூறினார். அவர் கூறுவதற்கான மூல காரணம் ஐநா மனித ஆணைக்குழுவின் 60, வது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் மனித உரிமை மீறல், இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி என்பவற்றுக்கு இலங்கையை அழுத்தம் கொடுப்பதை தவிர்த்து மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் என்ற வேண்டுகோளை அதில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியா சார்பாக ஜெனிவாவில் இந்த கூட்டத் தொடரில் உரையாற்றிய இராஜதந்திரியும் மாகாணசபை தேர்தல் நடத்துவதையே வலியுறுத்தியிருந்தார்.
இந்த விடயங்களுக்கு பதில் சொல்வதாகவே 2026, ல் கட்டாயம் மாகாணசபை தேர்தல் நடத்தப்படும் என மேலோட்டமாக கூறிவிட்டு அதில் ஒரு பொறி வைத்துள்ளார் “எல்லை நிர்ணயம்” முடித்தே மாகாண சபை தேர்தல் என்றும் அந்த எல்லை நிரணயம் முடிந்த பின்னரே மாகாணசபை தேர்தல் எவ்வாறான முறையில் விகிதாசாரமுறையா? அல்லது கலப்பு முறையா? என்பதை பாராளுமன்றம் முடிவெடுக்கும் என கூறியுள்ளார்.
எல்லை  நிர்ணயம் தேவையா? இல்லையா? என்பதை பாராளுமன்றம் முடிவெடுக்கும் என அவர் கூறவில்லை.
எல்லை நிரணயம் என்ற பொறிமூலம் காலத்தை இழுத்தடித்து தேசிய மக்கள் சக்தி அரசியின் செல் வாக்கை உறுதிப்படுத்திய பின்னரே மாகாணசபை தேர்தலை எதிர்பார்க்கலாம் அது பெரும்பாலும் 2026, ல் நடைபெற வாய்ப்பில்லை.
ஏனெனில் தற்போது ஒருவருட தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் தென்பகுதியில் அவர்களுடைய செல்வாக்கில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு நல்ல உதாரணம் கடந்த 08/10/2025, ல் கலகெதர பலநோக்கு கூட்டுறவு சங்க இயக்குனர் சபை தேர்தலில் ஏழு உறுப்பினர்கள் தெரிவில் தேசிய மக்கள் சக்தியால் போடப்பட்ட ஏழுபேரும் தெரிவாகவில்லை படு தோல்வி அடைந்துள்ளனர்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என் பதை போல் ஒரு பிரதேசத்தின் சாதாரண கூட்டுறவு சங்க தேர்தலிலே இந்த நிலை எனின் மாகாணசபை தேர்தலில் பலத்த தோல்வியை சந்திக்கலாம் என்ற அச்சம் தற்போது திசைகாட்டிக்கு ஏற்பட்டுவிட்டது அதனால்தான் “எல்லை நிர்ணயம்” என்ற சொல்லோடு காலத்தை கடத்த வாய்ப்புள்ளது.
அடுத்த விடயம் புதிய அரசியலைப்பை தாம் பதவி ஏற்று ஒரு வருடத்தில் நிறைவேற்றுவோம் என வாக்குறுதியை கடந்த 2024, ஜனாதிபதி தேர்தல், பாராளு மன்ற தேர்தல் காலத்தில் எல்லாம் தேசிய மக்கள் சக்தியால் கூறப்பட்டன.
அந்த அரசியலமைப்பில் கடந்த 2015, நல்லாட்சி அரசால் தயாரிக்கப்பட்ட வரைவில் சமஷ்டி முறை என்பதனை இல்லாமல் செய்து “ஏக்கிய இராச்சிய” என்ற சிங்கள சொல்லை உள்வாங்கியதால் அதனை தமிழர் தரப்பும் முழுமையாக ஏற்கவில்லை, சிங்கள தரப்பும் முழுமையாக ஏற்கவில்லை பின்னர் அந்த வரைவை பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு திகதி ஒதுக்கிய நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியில் இருந்த மைத்திரிபால தன்னிச்சையாக பாராளுமன்றத்தை சட்டத்துக்கு முரணாக கலைத்து புதிய அரசியல் யாப்பை நிறைவே ற்றாமல் குப்பையில் வீசினார்.
தற்போது தேசிய மக்கள் சக்தி அரசால் புதிய அரசியல் யாப்பு விடயம் பேசும் பொருளாக மாறி அண்மையில் சுவிஷ்நாட்டில் இலங்கையில் இருந்து சென்ற அரச தரப்பு எதிர்த்தரப்பு முக்கியமாக தமிழ்தேசிய கட்சிகளை சேர்ந்தவர்கள் முன்னி லையில் புதிய அரசியல் யாப்பு ஏக்கி இராச்சிய சொல் மீண்டும் முளைத்துள்ளன.
புதிய அரசியல் யாப்பில் ஏக்கியராச்சிய என்ற சொல்தொடர் ஒற்றையாட்சிக்கான வரை வாகவே பார்க்கப்படுவதால் அதனை சகல தமிழ் கட்சிகளும் ஒற்றுமையாக ஏற்பதற்கு தயார் இல்லை.
சிங்கள எதிர்கட்சிகளும் ஏற்கனவே ஏக்கிய இராச்சிய என்ற சொல்லுக்கு கடும் எதிர்ப்புகளை நல்லாட்சி காலத்தில் வெளியிட்டன.
தற்போது தேசிய மக்கள் சக்தி “ஏக்கிய இராச்சிய” என்ற சொல்லை வைத்து புதிய அரசியல் யாப்பை காலத்தை இழுத்தடித்து செல் வதற்கு தயாராகிவிட்டார்கள். எனவே தேசிய மக்கள் சக்தி அரசா னது “எல்லைநிர்ணயம்” என்ற சொல் மாகாணசபை தேர்தலை பிற்போட்டு செல்லவும், “ஏக்கிய ராச்சிய” என்ற சொல் புதிய அரசியல மைப்பை காலத்தை கடத்த வும் கருவியாக கையில் எடுத்துள்ளனர் என்பது மட்டும் உண்மை