இலங்கை – ரஷ்ய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்திற்கான இலங்கை – ரஷ்ய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவுசெய்யப்பட்டார்.

இதேவேளை, அமைச்சர் சுசில் ரணசிங்க நட்புறவுச் சங்கத்தின் செயலாளராகவும், பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க நட்புறவுச் சங்கத்தின் பொருளாளராகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

நட்புறவுச் சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் புதன்கிழமை (8) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

ரஷ்யாவின் இலங்கைக்கான தூதுவர், லெவன் எஸ். செகேரியன் கௌரவ அதிதியாக இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றத்தின் சட்டவாக்க சேவைகள் மற்றும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளர் எம். ஜயலத் பெரேராவும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தின்போது, இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.