துபாயில் நடைபெற்ற ஆசியாக் கோப்பை 2025 (2025 Asia Cup) என்ற கிரிக்கெட் போட் டித் தொடர், போர்க்கால முரண்பாடுகளைப் பிரதிபலித்திருக்கிறது. 2024 இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதையோ, அல்லது 2022இன் பீவா உலகக் கிண்ணப் போட்டியையோ (FIFA World Cup) இதற்கு உதாரணங்களாகக் காட்டலாம். ஆனால் அவையெல்லாம் மூடிய கதவுகளுக்குப் பின்னால், விளையாட்டுத்துறை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளாகும். ஆனால் இம்முறை நடைபெற்ற ஆசியாக் கோப்பைக்கான போட்டித் தொடர் இதற்கு முற்றிலும் மாறு பட்டதாகும்.
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே விளையாடப்பட்ட மூன்று போட்டிகளும், இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற போரை ஒத்ததாக இருந்தன: குண்டு வீச்சு விமானங்கள் ஒன்றோடொன்று தாக்கியழிக்கப்படுவதாகக் காண்பிக்கப்பட்ட கைச்சைகைகள், வழமையாக நடைபெறும் கைகுலுக்கல்கள் மறுக்கப்பட்டமை, போட்டி நடு வரை உள்ளடக்கிய மோதல்கள் என்று இரண்டு கிரிக்கெட் சபைகளுக்கிடையேயான ஒரு மோதல் களமாக அந்தப்போட்டிகள் காட்சி தந்தன.
இந்த மோதல்களுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே பல போர்கள் வரலாற்றில் நடைபெற்றிருக் கின்றன. இதன் காரணமாக கிரிக்கெட் ரீதியாக அவர்களுக்கு இடையே இருந்த தொடர்புகள் அந்தப் போர்களினால் அதிகமாகப் பாதிக்கப் பட்டிருக்கின்றன. பாகிஸ்தானுடன் தொடர்புடைய ஆயுததாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட 2008 மும்பாய் தாக்குதலுக்குப் பின்னர், ஒரேயொரு இருதரப்புத் தொடர் மட்டுமே இரண்டு நாடு களினால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தொடர் இந்தியாவினால் 2012 இல் முன் னெடுக்கப்பட்டது.
இரு நாடுகளையும் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் களத்தில் ஒருவரை யொருவர் சந்தித்த பொழுது, மிகவும் பண் பாகவும் நடுநிலைத்தன்மையோடும் நடந்து கொண்டதைக் காண முடிந்தது. அந்த நிலை முற்றாக மாறி, விளையாட்டு வீரர்களும் அரசி யல் வாதிகளும் ஒரேமாதிரியான நடத்தையைப் பின்பற்றுவதை இம்முறை காணமுடிந்தது. ஆசி யாக் கோப்பை இந்த ஆண்டு விளையாடப் பட்ட முறையைக் கண்ணோக்கும் போது, பல பில்லியன் டொலர்கள் வருமானத்தை அள்ளிக்கொடுக்கும் கிரிக்கெட் விளையாட்டு, இராணுவமயமாக்கப்பட்டிருப்பதை மிகவும் தெளிவாக அவதானிக்க முடிந்தது.
அரசியல் தன்மை வாய்ந்த கருத்துகளைத் தெரிவித்ததற்காக தண்டப்பணம் செலுத்தப்பட்ட பொழுதிலும், பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்த பின்னர் செப்டெம்பர் 14ம் திகதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்தியாவின் கப்டனான, சூரியகுமார் யாதவ், தமது வெற்றியை பஹல்கம் தாக்குதலில் பலியானவர்களுக்கும் இந்திய இராணுவத்துக்கும் சமர்ப்பணம் செய்தார்.
இறுதிப் போட்டியில் நான்கு ஓவர்களில் 50 ஓட்டங்களை இந்தியா எடுப்பதற்குக் காரணமான பாகிஸ்தானின் விரைவுப் பந்து வீச்சாளரான ஹறிஸ் ராஉவ் கூட விளையாட்டுக்குரிய பண்பு களுக்கு எதிராகவே நடந்துகொண்டார். மே மாதம் நடைபெற்ற போரில் இந்தியாவைச் சேர்ந்த ஆறு போர் விமானங்கள் தாக்கப்பட்டதை செய்து காண்பித்ததற்காக போட்டிக்கான அவரது கட்டணத்தின் 30 வீதத்தை தண்டப்பணமாக அவர் செலுத்தினார். றாவுவ்வின் செய்கை சமூக வலைத் தளங்களில் வைரலாகப் பரவியது.
இதிலே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் யாதவ், ராவுவ் இருவருமே போட்டியில் நன்றாக விளையாடவில்லை. ஆனால் அவர்களது மிகைப் படுத்தப்பட்ட தேசியவாதம் கடும் உணர்வுகளுடன் வெளியே காட்டப்பட்டது. ஒருவேளை இவ் வாறு தான் இன்று எல்லா விடயங்களும் நடை பெறுகின்றன போன்று தோன்றுகின்றது. தற்காலத்தில் விளையாட்டு மைதானத்தில் அவர்கள் காட்டும் திறமையை விட, சமூக வலைத்தளங்களில் இவர்கள் வெளிப்படுத்தும் சாகசங்களே அவர்களது விசிறிகளை அதிகமாகக் கவர்வதை பார்க்கக்கூடியதாக இருக்கிறது.
பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவத ற்கு மட்டும் இந்திய வீரர்கள் மறுக்கவில்லை. ஆசியாவின் கிரிக்கெட் சபையின் தலைவராக இருக்கின்ற மொஷின் நக்வியிடமிருந்து (Mohsin Naqvi) வெற்றிக்கிண்ணத்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் அவர்கள் புறக்கணிந்திருந்தார்கள். மொஷின் பாகிஸ்தான் அமைச்சரவையில் ஓர் அமைச்சராக இருப்பதுடன், தனது நாட்டு கிரிக்கெட் சபைக்கும் தலைமை தாங்குகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஒரு காட்சியை இதற்கு முன்னர் ஒருபோதுமே நாங்கள் பார்த்ததில்லை. வெற்றியடைந்த குழுவினர் வெறுங்கையாகத் தமது வெற்றியைக் கொண்டாடிக்கொண்டிருந்தனர். ஏனென்றால் நக்வியிடமிருந்து கிண்ணத்தைப் பெற்றுக்கொள்ள இந்தியக் குழுவினர் மறுத்த பொழுது, வெள்ளியிலான அந்தக் கிண்ணம் ஆசிய கிரிக்கெட் சபையினரால் அப்புறப்படுத்தப்பட்டது. “நிலைமை கேலிக்கூத்தாக மாறிவிட்டதாக” முன்னர் இந்தியாவுக்காக விளையாடியவரும் தற்போது கிரிக்கெட் வர்ணனைசெய்பவருமாக விளங்குகின்ற ரவி ஷாஸ்திரி கருத்துத் தெரிவித்தார். “முழுவிளையாட்டுத் தொடருமே தேசியவாதத்துக்குப் பலியாகியிருக்கிறது” என்று தெரிவித்த ஷாஸ்திரி, விளையாட்டு, மோதல்களில் ஈடுபடுபவர்கள் நடுவே உரையாடலை ஊக்குவிக்க வேண்டுமேயொழிய மேலும் பிரிவினைகளை உருவாக்கக்கூடாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
விளையாட்டுக்கும் போரை முன்னெடுக் கும் வெளிநாட்டுக் கொள்கைக்கும் இடையேயான தெளிவான வேறுபாடு மழுங்கடிக்கப்பட்டு, நாகரீகமான மனிதர்கள் விளையாடும் விளை யாட்டான கிரிக்கெட்டின் மாண்பு இங்கே மாசுபடுத்தப்பட்டிருக்கிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது உத்தியோக பூர்வ எக்ஸ் தளத்தில் மேற்கொண்ட பதிவில், இந்தியா வின் விளையாட்டை “சிந்தூர் தாக்குதல்” எனக்குறிப்பிட்டிருந்தார். “ஒரு மிக மோசமான மோதலை ஒரு கிரிக்கெட் போட்டிக்குப் பிரதமர் ஒப்பீடு செய்திருக்கிறார்” என்று இந்தியாவின் முன்னணி ஊடகவியலாளரான சுஹாசினி ஹய்டார் சுட்டிக்காட்டினார். பிரதமர் மேற்கொண்ட பதிவும் அதனைத் தொடர்ந்து வந்து ஆய்வும், எவ்வாறு ஒரு போர்க்களமாக இந்தக் கிரிக்கெட் தொடரைக் காட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டன என்பதை மிகவும் தெளிவாகக் காட்டுகிறது.
பல உயிர்களைக் காவுகொண்டு, பல்லாயி ரம் குடும்பங்களுக்குத் தாங்கொணாத் துயரத்தைக் தந்து, பாரிய பொருண்மிய இழப்புகளை ஏற்படுத்திய ஒரு இராணுவத் தாக்குதலை ஒரு விளையாட்டுடன் ஒப்பிடுவது எவ்வளவு மடமை என்பதை இதன் மூலம் அறிய முடிகின் றது.
இங்கே இன்னும் பிரச்சினைக்குரிய விடயம் என்னவென்றால், விளையாட்டின் பொழுது வெளிப்பட்ட வெளிவேடத்தன்மை ஆகும். அரசியல் பிரச்சினைகளையும் பாதுகாப்பு அச்சுறுத்தலகளையும் காரணங்காட்டி, இந்தியா வின் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பாகிஸ் தானுடன் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளை முன்னெடுப்பதற்கு மறுப்புத் தெரிவித்து வந்தது. ஆனால் ஆபத்து அதிகமாக இருக்கும் பொழு தும் கூட நிதியளிப்பவர்கள் பல மில்லியன் டொலர் களைக் கொடுக்க முன்வரும் வேளையில், இந்தியாவும் பாகிஸ்தானும் பல பல பல்தரப்புப் போட்டிகளை நடத்த முன்வருகிறார்கள். இந்தியப் பொதுமக்கள் கூட தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொண்டனர். முதலாவது போட்டியில் காட்டப்பட்ட பகிஷ்கரிப்பு, இறுதிப் போட்டியில் பெரும் கொண்டாட்டமாக மாற்றம் அடைந்தது. தொலைக்காட்சியைப் பார்ப்பவர்களின் எண் ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அதனால் ஈட்டப் படும் இலாபமும் அதிகரிக்கிறது. களத்தில் காட்டப்படும் ஒவ்வொரு மோதல் வெளிப்பாடும் அதிகமான மக்களை விளையாட்டைப் பார்க்கத் தூண்டுகிறது. கிரிக்கெட் விளையாட்டை இராணு வமயமாக்கி அதனை வர்த்தக நலனாக்கும் அணுகுமுறையைப் பார்க்கும் பொழுது, மைதா னத்தில் விளையாட்டு வீரர்கள் தமது திறமைக்காக அல்லாது தமது தேசியவாத சாகசத்துக்காக வெகுமதி அளிக்கப் படுவதாகவே தோன்றுகிறது.
மறுபக்கமாகப் பார்க்கும் பொழுது பாகிஸ் தானைச் சேர்ந்த கிரிக்கெட் சபையும் விளையாட்டு வீரர்களும் கூட வித்தியாசமானவர்களாகத் தெரியவில்லை. தாக்குதலில் வீழ்ந்து நொருங் கும் போர் விமானங்களைச் சைகையில் காட் டிய ராவுவ்வின் செயற்பாட்டைப் பார்க்கும் பொழுது, விளையாட்டுக்குரிய தனித்துவமான பண்புகளை வெளிப்படுத்தாது பார்வையாளர் களைக் கவர்வதில் அவர்கள் கருத்தாயிருந் ததையே பார்க்க முடிகிறது. தமது கிரிக்கெட் விளையாட்டில் கவனத்தைச் செலுத்துவதைத் தவிர்த்து, பத்திரிகைகளில் தமது பெயர்கள் குறிப்பிடப்படவேண்டும் என்பதற்காக எதிர்த் தரப்பைச் சீண்டும் செயல்களைச் செய்வதிலேயே அவர்களும் ஈடுபட்டதைக் காணமுடிந்தது. இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது, விளை யாட்டுக்குரிய ஒழுக்கவிதிகளைக் கடைப் பிடிப் தற்கு மேலாக, தேசியவாதத்தைக் கடைப் பிடிப் பதிலேயே அடுத்த பரம்பரையைச் சேர்ந்த கிரிக் கெட் வீரர்கள் முனைப்பாயிருப்பார்கள் என்பதை எதிர்வுகூறக்கூடியதாகவுள்ளது.
தமது சொந்த நாட்டில் நிலவும் சூழ் நிலையை விளையாட்டு வீரர்கள் பிரதிபலிக்கும் பொழுது, விளையாட்டில் அவர்கள் வெளிப் படுத்தும் ஆற்றல் பாதிப்புக்குள்ளாவது மட்டு மன்றி, விளையாட்டு முடிந்ததன் பின்னர் கூட எதிர்த்தரப்பு வீரர்களுடன் அவர்கள் வெளிப் படுத்தும் நடத்தையும் பாதிப்புக்குள்ளாகின்றது.கிரிக் கெட் விளையாட்டில் முன்னணி வகிக்கின்ற முக்கியமான இரண்டு நாடுகள் இவ்வாறான ஒரு நடத்தையை வெளிப்படுத்தும் பொழுது, இந்த விளையாட்டில் புதிதாகக் காலடி எடுத்து வைக்கும் நாடுகளுக்கு, அது ஒரு தவறான முன்னுதாரணமாக மாறிவிடுகின்றது. விளையாட்டு எதனைப் பிரதி பலிக்கின்றதோ அதற்கு முற்று முழுதும் எதிரான ஒன்றையே இந்தக் கோப்பைக் கான போட்டி வெளிப்படுத்தியது.
விளையாட்டுக் குரிய பண்புகளுக்குப் பதிலாக ஒரு மோதல் தன்மையையும், ஒரு போரின் போது வெளிப்படுத் தப்படும் உணர்வுகளையுமே விளையாட்டு மைதானத்தில் இந்தக் கோப்பைக்கான தொடர் காட்சிப்படுத்தியிருக் கிறது.
கிரிக்கெட் விளையாட்டின் எதிர்காலத் தையும் இந்த விளையாட்டை மனமார இரசிக் கின்றவர்களின் நலனையும் கருத்தில் எடுக்கின்ற பொழுது, இந்த இரண்டு குழுவினரும் ஒரு வரையொருவர் சந்திக்காமல் இருப்பதே நன் மையாக இருக்கும். இவ்வாறாக அரசியல் கலப்பின்றி விளையாட்டை இரசிகர்கள் இரசிக்கக் கூடியதாகவிருக்கும். கிரிக்கெட் விளையாட்டு இப்படி இருக்கக்கூடாது. இந்தியா-பாகிஸ்தான் சந்திக்கும் ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியையும் இலாபத்துக்கான ஒரு போர்க்களமாக மாற்ற இதனை நடத்துபவர்கள் விரும்புவார்களாக இருந்தால், அதனை அவர்கள் பகிரங்கமாகவே சொல்வது தான் நன்மை பயக்கும். 2025 ஆசியக் கோப்பையைப் பார்க்கும் பொழுது, மைதானத்தில் பெறப்பட்ட ஓட்டங்களுக்கோ அல்லது அங்கே வீழ்த்தப்பட்ட விக்கெட்டுகளுக்கோ அது நினைவுகூரப்படாது. அதற்கு மாறாக இந்த விளையாட்டுக்கு ஏற்படுத்தப்பட்ட அபகீர்த் திக்காகவே அது நினைவுகூரப்படும். இது இந்த விளையாட்டின் மிகக் கவலைக்குரிய நினைவாக வரலாற்றில் பதிவுசெய்யப்படும்.
தங்கள் அணுகுமுறையை இந்த இரண்டு குழுக்களும் மாற்றும் வரை, அவர்களைத் தடைசெய்வது தான் இதற்கான ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். ஏன் சிறீலங்கா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளும் உலகம் முழுவதும் உள்ள நடுநிலையான பார்வையாளர்க ளும் தங்கள் பல்தரப்பு கிரிக்கெட் விளையாட்டை தங்களுக்கிடையே நிலவுகின்ற அரசியல் மோதலுக்குப் பழிதீர்க்கும் இடமாக மாற்றும் மோசமான செயற்பாட்டுக்கு முகம் கொடுக்க வேண்டுமா? என்ற கேள்வியைக் கேட்கத் தூண்டுகின்றது. இந்த இரண்டு நாடுகளுக்கும் ஒரு தற்காலிக தடை விதிக்கப்படுகின்ற பொழுது தான், தேசியவாதத்தை வெளிப்படுத்தும் ஒரு களமாக கிரிக்கெட் விளையாட்டை மாற்ற முடியாது என்ற செய்தி பலமாகச் சென்று சேரும்.
உண்மையில் அவ்வாறான ஒரு தடையைப் போடுவது என்பது இலகுவான காரியமல்ல. நிதிவாரியாகப் பார்க்கும் பொழுது இந்தியா உலகிலேயே அதிக இலாபத்தை ஈட்டக்கூடிய ஒரு பலமான நாடாகத் திகழ்கிறது. பாகிஸ்தானும் அதற்கு எந்த வகையிலும் விதிவிலக்கல்ல. இந்த இரண்டு நாடுகளும் விளையாடுகின்ற பொழுது பாரிய எண்ணிக்கையானோர் விளையாட்டைக் கண்டுகளிப்பதால், இதற்கு நிதிவழங்குபவர்கள் அதற்கு முண்டியடிக்கிறார்கள். பன்னாட்டு கிரிக்கெட் சபை தனது ஒரு முக்கிய சந்தையைக் கைவிடுவதற்குத் தயாராக இருக்காது. இங்கே ஒரு முரண்நகை இருப்பதை அவதானிக்கலாம். கிரிக்கெட் விளையாட்டின் விளையாட்டுப் பண்பைப் பாழாக்கும் போட்டிகள் தான், அந்த விளையாட்டு தொடர்ந்து நிலைப்பதற்கான பணத்தையும் வழங்குகிறது. எடுக்கப்படும் முடிவுகளுக்கு பணம் அடித்தளமாக இருக்கும் வரையும், அழிவை ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான நிலைமையின் பணயக்கைதியாக கிரிக்கெட் விளையாட்டு தொடரப்போகிறது என்பதே உண்மையாகும்.
நன்றி: அல்ஜஸீரா