ஐ.நா.- இலங்கை தொடர்பான பிரேரணை வாக்கெடுப்பை கோர அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இல்லையா – நாமல் கேள்வி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் இலங்கை விவகாரத்தில்  வாய்மூலம் எதிர்ப்பு தெரிவித்த போதும் வாக்கெடுப்பை கோரவில்லை. வாக்கெடுப்பை கோருவதற்கு அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லையா? என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் பல  நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக உள்ளன. யாரை நீங்கள் மகிழ்விக்கப் போகின்றீர்கள். தமிழ் புலம்பெயர் அமைப்புக்களையா,  அல்லது  விடுதலைப் புலி ஆதரவாளர்களையா ? ஐ.நா.விவகாரத்தில் இரட்டை வேடம் அணிவதை அரசாங்கம்  தவிர்க்க வேண்டும் என்றார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) நடைபெற்ற  அமர்வின் போது போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சின்  2025 குறைநிரப்புத் தொகை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.