இந் நாட்டில் நிலவிய போரை முடிவுக்கு கொண்டுவந்து வடக்கிலும் மாகாணசபைத் தேர்தலை மஹிந்த இராஜபக்ச நடாத்திக் காட்டியிருந்தார். ஆனால் அவருக்குப் பிறகு வந்த ஜனாதிபதிகளால் மாகாணசபைத் தேர்தலை நடாத்த முடியாமல் உள்ளது.” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் இராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
எமக்கு பொருத்தமான அரசியல், பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளுடன் முன்னோக்கிப் பயணிக்க வேண்டும். அதிகாரத்துக்காகத் தமது கொள்கையைக் காட்டிக்கொடுக்கும் கட்சி அல்ல எமது கட்சி. தேர்தலில் வென்றாலும், தோற்றாலும் கொள்கைகளை கைவிட்டது கிடையாது. சில கட்சிகள் தேர்தல் வெற்றிக்காக தமது கொள்கையை மாற்றுகின்றன. அதேபோல பொய்களையும் கூறுகின்றன. இப்படியான கட்சிகளுக்கு அழிவு நிச்சயம்.
செய்யக்கூடிய விடயங்களை மட்டுமே எமது கட்சி கூறிவருகின்றது. 13 ஐ தருகின்றோம், அதைத் தருகின்றோம், இதைத் தருகின்றோம் என எம்மாலும் கூறி இருக்க முடியும். 13 ஐ தருகின்றோம் எனக் கூறுபவர்கள் வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடத்தவில்லை.
மஹிந்த இராஜபக்சதான் வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தினார். அவருக்கு முன்னால் இருந்த ஜனாதிபதிகளாலும் அது முடியாமல் போனது. போரை முடித்து கொடுத்தும் மஹிந்தவுக்கு பின்னால் வந்த ஜனாதிபதிகள் மாகாணசபைத் தேர்தலை நடத்தவில்லை
என்றார் நாமல்.