மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச சமூகம் உணரக்கூடியவகையிலும், அவர்கள் திருப்தியடையக்கூடிய அவசியமான நடவடிக்கைகள் சீராக முன்னெடுக்கப்பட்டால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்படல் வெளியக அழுத்தங்கள் படிப்படியாகக் குறைவடையும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின்போது நிறைவேற்றும் நோக்கில் பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்ட புதிய பிரேரணை, திங்கட்கிழமை (6) பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே நிமல் புஞ்சிஹேவா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.