பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பில் கவனயீர்ப்பு

மட்டக்களப்பில் காசா யுத்தத்தின் மூன்று வருட நினைவு நாளை முன்னிட்டு இன அழிப்புக்கு நியாயம் கோரியும் தனி நாடாக பிரகடனப்படுத்தி கோரி 1245 வது நாள் நியாய பயணத்தின் ஊடாக பலஸ்தீன கொடிகளை ஏந்தியவாறு  பெண்கள்  இன்று செவ்வாய்க்கிழமை (07) கல்லடி பாலத்துக்கு அருகில் உள்ள செபஸ்தியார் ஆலயத்தில் இருந்து காந்தி பூங்கா வரையும் கவனயீர்ப்பு நடைபயணம் இடம்பெற்றது.

மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகில் உள்ள செபஸ்தியார் ஆலயத்தில் இருந்து காந்தி பூங்கா வரையும் நீதி நியாயம் கோரி தொடர்ந்து 1245 வது நாள் நியாய பயணம் என்ற தொனிப்பொருளில் அநீதிகள் படுகொலைகளுக்கு எதிரான சுலோகங்கள் ஏந்தியவாறு பெண்கள் அமைப்பு நடைபயணம் மேற்கொண்டு வருகின்றது

இந்நிலையில் இன்று காசா யுத்தம் தொடங்கி மூன்று வருட நினைவை முன்னிட்டு பெண்கள் நியாய பயணம் அமைப்புடன் கல்லடி பாலத்துக்கு அருகே உள்ள செபஸ்தியார் ஆலயத்தில்  முன்னாள்   பெண்கள்  ஒன்று சேர்ந்தனர்.

இதனையடுத்து  77 வருடங்களாக பலஸ்தீனம் உன்னை புதைக்க முயற்சித்துள்ளனர் மீண்டும் மீண்டும் நீ சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவையாய் எழுவாயாக, உப்பில்லா உணவு போல  பலஸ்தீனம்  இல்லாத நாடு முழுமை அற்றதாகவும் சுவையற்றதாகும் இருக்கும்,  ஆற்றில் இருந்து கடல் வரை பலஸ்தீனம் விடுதலையாகும் என சுலோகங்களை கழுத்தில் தொங்க விட்டவாறு அங்கிருந்து காந்தி பூங்கா வரையும் நடைபயணமாக சென்றடைந்தனர்

அதனை தொடர்ந்து அங்குள்ள காந்தி சிலையில் காந்தியின் மேல் பலஸ்தீன அடையாளம் கொண்ட துணியால் அவரது உடலை போர்த்து கொண்டதுடன் தலைக்கு மேல் குடை ஒன்றை பொருத்திய பின்னர்  யுத்தத்தின் வேதனை அறிந்தவர்கள் நாம். இந்த வேதனை  எங்கும் தொடரக்கூடாது, நாளைய மழலைகள் பலி ஆகக் கூடாது என்பதே எமது வேண்டுதல். எங்கேயோ கேட்ட வை என குரல் எழுப்பிக்கொண்ட பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.