ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (07) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆறாவது தவணை வெளியிடப்படுவதற்கு முன்னர் நடைபெறும் ஐந்தாவது இடைக்கால மதிப்பாய்வின் கட்டத்தை முன்னிட்டு இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
பொருளாதார திவால்நிலையிலிருந்து நாட்டை மீட்டு வளர்ச்சி நோக்கி கொண்டு செல்வதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என்றும், அதற்கான ஒரு மூலோபாய திட்டம் அரசாங்கத்திடம் உள்ளது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அந்த திட்டத்தை வெற்றிகரமாக மாற்றுவதில் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய ஆதரவை தாம் பெரிதும் பாராட்டுவதாகவும் ஜனாதிபதி கூறினார்.