வசிம் தாஜுதீன் கொலை போன்ற குற்றங்களை கிராமத்தில் உள்ளவர்கள் செய்யவில்லை, மாறாக நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களே செய்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகளின்படி குற்றங்களில் தொடர்புடையவர்கள் அரசியல் ஆர்வலர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சட்டம் அமுல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த குற்றங்களை நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களே செய்தார்கள் என்றும், அவர்கள் குற்றங்களை மூடி மறைத்தனர் என்றும் அவர் தெரிவிததுள்ளார்.
வசிம் தாஜுதீன் 2012 இல் கொலை செய்யப்பட்டார். 2015 ஆம் ஆண்டு பத்திர மோசடி இடம்பெற்றதோடு, 2019 இல் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதல்கள் இடம்பெற்றன. இந்த சம்மபவங்களில் சம்பந்தப்பட்டவர்கள் யாராயினும் சட்டம் செயல்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் அரசாங்கம் தலையிடாது என்றும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.