வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 100 பாட சாலைகளின் புனரமைப்பு மற்றும் நவீனமயமாக்கலுக்கான எதிர்காலத் திட்டங்களை முன்னெடுக்க ஜப்பான் நிப்பொன் மன்றம் உத்தரவாதமளித்துள்ளது.
டோக்கியோவில் உள்ள நிப்பொன் மன்றத்தின் ஸ்தாபகத் தலைவருக்கும் ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்குச் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையே நடந்தகலந்துரையாடலில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குத் தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்றும் நிப்பொன் மன்றத்தின் ஸ்தாபகத் தலைவர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.