தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி போராட்டம்!

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும், செம்மணிப்புதைகுழிகளுக்கும் நீதிகோரி செம்மணி வளைவில் இன்று கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தமிழர்களுக்கு அநீதிகளுக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி, செம்மணியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சுழற்சி முறையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இடம்பெற்றுவருகின்றது. இருதினங்களுக்கு முன்னர் முடியவேண்டிய இந்தப் போராட்டத்தை, செம்மணிப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர் என்புத்தொகுதிகளுக்கு நீதிகோரி, சிறுவர் தினமான இன்று வரை நீடிப்பதற்கு ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்திருந்தனர்.

இதன் தொடர்ச்சியாகவே, இன்று காலை முதல் உணவுத் தவிர்ப்புப் போராட்டமும், அதைத் தொடர்ந்து கவனவீர்ப்புப் போராட்டமும் இடம்பெறவுள்ளன.