சிறு வயது கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

அநுராதபுரம் மாவட்டத்தில் சிறு வயது கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அநுராதபுரம் மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி குழு தெரிவித்துள்ளது.

கல்வி நடவடிக்கைகளுக்காக சிறுவயதினர் இணையத்தை பயன்படுத்துவதன் காரணமாக சிறு வயது கர்ப்பம் அதிகரித்துள்ளதாக அக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறுவர்களிடையில் கையடக்கதொலைபேசி பயன்பாட்டை ஒழுங்குபடுத்துதல், சிறப்புத் தேவைகள் உள்ளவர்களுக்கு கல்வியை மேம்படுத்துதல் மற்றும் சிறுவர் நலத் திட்டங்களை வலுப்படுத்துதல் வேண்டும்.

யுனிசெஃப் (UNICEF) ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் மாவட்டங்களிலுள்ள ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான  ஊட்டச்சத்து திட்டத்தைத் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.