கடந்த ஆண்டில் இராஜதந்திர உறவுகளில் சமநிலையைப் பராமரிக்க முடிந்தது : ஜப்பானில் ஜனாதிபதி கருத்து

கடந்த ஆண்டில்  இராஜதந்திர உறவுகளில் சமநிலையைப் பராமரிக்க  இலங்கையினால் முடிந்தது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

தொடர்ந்தும் பொருளாதாரம் மற்றும் சந்தையில் தேசிய எல்லைகள் இல்லாத உலகில், எந்த நாடும் தனியாக முன்னேற முடியாது என்றும், சிறந்த இராஜதந்திர உறவுகள் இலங்கையை உலகின் உச்சத்திற்கு உயர்த்தும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு, தேசிய ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்றும்,  இலங்கை வரலாற்றில் எந்த இன மோதல்களும்  தலைதூக்காத ஆண்டாக கடந்த வருடம் வரலாற்றில் இணைவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

டோக்கியோவில் உள்ள Reiyukai மண்டபத்தில் சனிக்கிழமை (27) பிற்பகல் ஜப்பானில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருடனான   சந்திப்பில் உரையாற்றும் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.