அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் உள்ள Lotte New York Palace ஹோட்டலில் கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ள நியூயோர்க் நகரத்திற்கு வருகை தந்திருந்த அரச தலைவர்களுக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தின் போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இடையில் சிநேகபூர்வ உரையாடல் ஒன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி அநுரகுமார தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.