மகிந்த கோட்டா பாணியில் அநுர அரசும்?

மன்னாரில் நேற்று இரவு (26/09/2025) 10, மணிக்கு பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கலகமடக்கும்  காவ என பல நூற்றுக்கணக்கானவர்களின் பாதுகாப்புடன் பல வாகனங்களில் காற்றாலை மின் கோபுரம் அமைப்பதற்கான பொருட்கள் மன்னார் நகருக்குள் கொண்டுவரப்பட்டது.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வீதியை மறித்து போராட்டங்களை மேற்கொண்டனர்.
இதன் போது பெண் பொலிஸார் இல்லாத நிலையில் ஆண் பொலிஸார் பெண்கள் மீது கடுமையான தாக்குதல்களையும் மேற்கொண்டனர்.

மேலும் அங்கிருந்து அருட்தந்தையர்கள் உள்ளடங்களாக அவர்கள் மீதும் பொலிஸார் கண் மூடித்தனமாக தாக்குதலையும் மேற்கொண்டதோடு தேவையற்ற வார்த்தை பிரயோகங்களையும் மேற்கொண்டிருந்தனர்.

மன்னார் மக்கள் போராட்டம் 55, நாட்களாக தொடர்கிறது அவர்களின் நியாயமான கோரிக்கை காற்றாலை திட்டம் வேண்டாம் என்பதே அவர்களின் கோரிக்கையை மீறி அடாவடித்தனமாக மக்களையும், மத தலைவரைகளையும் அடித்து துன்புறுத்தியதை பார்த்தால் கடந்த ஜனாதிபதிகளான மகிந்த, கோட்டா காலத்தையே தற்போதைய ஜனாதிபதி அநுரா ஆட்சி யும் ஞாபகப்படுத்தியுள்ளது..!

-பா.அரியநேத்திரன்-