அன்று 1987,செம்டம்பர்,15, தொடக்கம் 26, வரை. தன்னை வருத்தி தமிழ் மண்ணுக்காக உணவை தவிர்த்து, உணர்வை வெளிக்காட்டி உடலை வருத்தி, உலகில் வெளிப்படுத்தி ஆகுதியான 23, இளைஞனின் 38, வது ஆண்டு நினைவு இன்றாகும்..!
இலங்கை இந்திய ஒப்பந்தம் 1987, யூலை,29, ல் மேற்கொள்ளப்பட்டதால் இந்திய அரசு காந்தீய வழியில் போராடிய இரண்டு உயிர்களை பல எடுத்த வரலாறு ஈழத்தமிழினத்துக்கு மட்டுமே உண்டு.
யாழ்ப்பாணத்தில் ஒரு மகன்-தியாகி திலீபன்..
மட்டக்களப்பில் ஒரு தாய்-அன்னைபூபதி
தியாகி திலீபன் [பிறந்த திகதி 1963, நவம்பர்,27] 23, வயதில் 1987, செம்டம்பர்,15-26, வரை 12, தினங்கள் நீர் கூட அருந்தாமல் அவரால் முன்வைத்த 05, கோரிக்கைகள்..
1. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும்கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2. சிறைக் கூடங்களிலும் இராணுவக் காவல் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
4. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முழுமையாகக் களையப்பட வேண்டும்.
5. தமிழர் பிரதேசங்களில் புதிதாகக் காவல் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.
அன்னை பூபதி [பிறந்தது 1932,நவம்பர் 03] 56, வயதில் 1988,மார்ச்,19, தொடக்கம் ஏப்ரல்,19, வரை நீர் மட்டும் அருந்தி 31, நாட்கள் அவரால் முன்வைத்த 02, கோரிக்கைகள்..
1. உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்டுத்த வேண்டும்.
2. புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும்.
இந்த தாயும், மகனும் இந்திய அரசிடம் தமிழீழம் கேட்டு உண்ணாவிரப்போராட்டம் செய்யவிலை,
சமஷ்டி தீர்வு கேட்டு போராட்டம் செய்யவில்லை. இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற போர்வையில் அமைதிப்படையாக ஈழமண்ணில் நுழைந்து ஆக்கிரமிப்பு படைகளாக மாறி இலங்கை அரசின் நிகழ்ச்சி திட்டத்தில் தமிழர்களுக்கு எதிராக நடவடிக்பைகளை மேற்கொண்டமையால்தான் இந்தியாவிற்கு எதிராக அந்த நாட்டின் அறவளிப்போர் மரபுகளுடன் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு பாரத்தின் பகட்டு முகத்திரையை கிழித்தெறிந்தனர்.
அவர்களின் தியாகங்களை நிறைவேற அதன்கான பணிகளை செய்வதே நாம் அவர்களுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.
அந்தவகையில் இன்று 26/09/2025, தியாகி திலீபனின் 38, ம் அண்டு நினைவாகும். அவர் இன்று உயிருடன் இருந்திருப்பின் 62, அகவையுடன் வாழ்ந்திருப்பார். அன்னை பூபதியின் 37,ம் ஆண்டு நினைவு கடந்த 2025, ஏப்ரல்,19, அவர் உயிருடன் இருந்திருந்தால் இன்று 93, அகவையுடன் வாழ்ந்திருப்பார்.
இன்று 2025, ஆண்டுகள் இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டு 13, வது சட்டத்திருத்தம் மூலம் அறிமுகமான மாகாணசபைமுறைமை இணைந்த வடகிழக்கில் ஒரே ஒரு தேர்தலை குறைமாத பிரசவமாக அரசியல் 2008, 2012, ல் இரண்டு கிழக்கு மாகாணசபை தேர்தலும்,2013, ல் ஒரேயொரு வடமாகாணசபை தேர்தல் மட்டுமே இடம்பெற்று எந்த ஒரு அதிகாரமும் இன்றி மாகாணசபை தேர்தல்களும் நடத்தமுடியாமல் காலத்தை இழுத்தடிக்கும் நிலையே தொடர்கிறது.
இப்போது தமிழீழம் கேட்டு போராடிய இனம் சமஷ்டி கேட்டு போராடிய இனம் மாகாணசபை தேர்தலை நடத்துங்கள் என கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்திய அரசும் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்று அவர்களால் இலங்கை அரசை வலியுறுத்த வக்கில்லாமல் ஜநா மனித உரிமை 60, வது கூட்டத்தொடரில் இந்திய தரப்பு இலங்கையில் மாகாணசபை தேர்தலையும், 13, வது திருத்தம் தொடர்பாகவும ஜெனிவாவில் இந்தியா சார்பாக கலந்துகொண்ட பிரதிநிதி கதைத்தார் என்ரால் இந்தியாவால் அந்த விடயத்தை இலங்கையிடம் கூறி வலியுறுத்த முடியாது என்பதை அல்லவா வெளிக்காட்டியுள்ளது.
ஈழத்தமிழர்களுக்கான இனப்படுகொலைக்கான சர்வதேச நீதியும் இல்லை. அரசியல் தீர்வும் இல்லை, புதிய அரசியல் யாப்பும் இல்லை, அப்படி மல்லுக்கட்டி சிலவேளை புதிய அரசியல்யாப்பு வந்தாலும் ஈழத்திழர்களை புறக்கணித்து கடந்த 2015, ல் நல்லாட்சி அரசில் பேசிய தமிழ் தரப்பு ஏற்காத ஏக்கியராச்சிய அரசியலமைப்பை மீண்டும் தூசிதட்டி முன்வைக்கவே தேசிய மக்கள் சக்தி அரசு முயல்கிறது.
ஈழத்தமிழினம் போராடும் ஒரு இனமாகவே யார் ஆட்சியில் இருந்தாலும் தொடரப்போகிறது இதுதான் தியாகி திலிபனின் 38, வது ஆண்டு நினைவில் நாம் கற்றுக்கொண்ட பாடம்.