சுதந்திரமாக செயற்பட நிதி அவசியம்: தேர்தல்கள் ஆணைக்குழு

தேர்தல்கள் ஆணைக்குழு சுதந்திரமாகச் செயற்பட வேண்டுமானால் அதற்கு நிதி சுதந்திரம் இருக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அவர், தேர்தல் ஆணைக்குழுவின் அதிகார வரம்பு இல்லாததும் பிரச்சினையாக உள்ளதாக தெரிவித்தார்.  இதேவேளை அடுத்த வருடத்துக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக, பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்தார்.