1987 செப்டம்பர் 15 முதல் 26 வரை நல்லூர் முருகன் ஆலய முன்றலில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட தியாகி திலீபன் இறுதியாக ஆற்றிய உரையில்.. “என் அன்பிற்கினிய மக்களே என்னால் பேச முடியவில்லை. பேச முடியாத நிலையில் இருந்தும் என்னை நீங்கள் தரும் உற்சாகம் பேச வைக்கிறது. நான் மீட்கப்பட முடியாத இடத்திற்கு போய்க் கொண்டிருக்கிறேன்.
நான் வாழ்நாள் முழுவதும் நேசித்த என் தேசத்து மக்களே, உங்களிடம் ஒரு பெரும் பொறுப்பை விட்டுச் செல்கிறேன். நீங்கள் அனைவரும் பரிபூரணமாக கிளர்ந்தெழ வேண்டும். இங்கே ஒரு மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும். மறைந்த போராளிகள் 650 பேருடன், 651வது போராளியாக நான் மேலே இருந்து மலரும் தமிழீழத்தை மகிழ்வோடு பார்ப்பேன். போராடத் தயாராகுங்கள். எனக்கு விடை தாருங்கள்.” எனகூறிவிட்டே ஆகுதியானார்.
அவர் அப்படிக்கூறி 18 நாட்களுக்குப் பின்னர் தான் 1987 அக்டோபர் 10ல் தமிழீழ விடுதலைப் புலிகள் – இந்தியப்படைகளுடன் போர் ஆரம்பித்தனர் அதன் பின்னர் 1990 ல் இலங்கைப்படையினருடன் போர் ஆரம்பித்து மரபுப்படையணிகளுடன் வளர்ச்சியடைந்து பல்வேறு சமர்கள் செய்து பின்னர் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சர்வதேச சதி மூலமாக 2009 மே 18ல் முள்ளிவாய்க்காலில் ஆயுதப் போராட்டம் மௌனித்தது
போர் மௌனித்து 16 வருடங்களாகியும் தியாகி திலிபன் கூறிய மக்கள். புரட்சி என்பதை எந்த ஒரு தமிழ்தேசிய கட்சிகளும் தலைமை தாங்கி முன் னெடுக்கத்தவறிவிட்டன.
ஆட்சியில் இருந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ, மைத்திரி பால, கோட்டபாய, ரணில்விக்கிரமசிங்க வரை தமிழர்களுக்கு எந்த அரசியல் தீர்வும் வழங்க தயாக இருக்கவில்லை. தற்போது ஆட்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தி அரசின் ஜனாதிபதி அநுராவும் அவருடை ஆட்சியும் சிங்கள மக்கள் மத்தியில் நம்பிக்கை இருந்தாலும் தமிழ் மக்களை பொறுத்தவரை குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கை அற்ற ஒரு ஜனாதிபதி யாகவே அநுராவும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை வடகிழக்கில் செய்து கொண்டுள்ளார்.
தற்போது செம்மணியில் 240, தாண்டி தமிழர் களின் எலும்புக்கூடுகள் இனப்படுகொலைக்கு சாட்சிய மாக வெளிவந்துகொண்டுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு சென்ற ஜனாதிபதி அநுரா அவர்கள் கச்சதீவுக்கு சென்று படம் காட்டியவர் செம்மணி படுகொலை புதைகுழிக்கு சென்று பார்ப்பதற்கு கூட மனம் வரவில்லை.
அவர் பார்ப்பதால் நீதிகிடைக்கும் என்று இல்லை தமிழ் மக்களுக்கு அவர் பார்த்தார் என்ற ஒருவகை திருப்தி ஏற்பட்டிருக்கும் அதுகூட அவர் செய்யவில்லை, தற்போது ஜெனிவாவில் மனித உரிமை ஆணைக் குழுவில் 60 வது கூட்டத்தொடர் நடக்கும் இந்த சந்தர்பத்தில் ஒட்டு மொத்த தமிழர்களும் சர்வ தேச விசாரணை தேவை என்ற தொடர் அழுத்தம் கொடுக்கும்போது உள்நாட்டு பொறிமுறைதான் தீர்வு என வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர் எல்லோரும் ஜெனிவாவுக்கு படை எடுத்து சென்று வலியுறுத்திவருவதை காணமுடிகிறது.
இவ்வாறான சந்தர்பத்தில் ஈழத்தமிழர்கள் ஒற்று மையாக ஒரேகுரலாக மக்களை அணிதிரட்டி தியாகி திலீபன் 1987ல் இதே மாதம் 38, ஆண்டுகளுக்கு கூறிய மக்கள் புரட்சிக்காக ஈழமக்கள் தமிழ் தேசிய கட்சிகள் அணிதிரள வேண்டிய தேவை இப்போது தமிழ் மக்களுக்கு அவசியம் உண்டு.
ஆயுதம் ஏந்தாமல் அறப்போராட்டம் மூலம் ஒருதுளி நீர் கூட அருந்தாமல் உறுதியாக தமது உயிரை இனத்துக்காக தியாகம் செய்யும் போது அவர் கூறிய வார்த்தையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஒவ்வோர் தமிழருக்கும் உண்டு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தேர்தல் அரசியலுக்காகவும், வாக்கு அரசி யலுக் காகவும் தமிழ்தேசிய கட்சிகள் செயல் படுவதை விட்டு விடுதலை அரசியலுக்காக மக்களை அணிதிரட்டும் காலம் 16 வருடம் கடந்தும் செய்ய தவறினால் தமிழ்மக்களில் இருந்தும், குறிப்பாக தமிழ் இளைஞர்கள் மத்தி யில் இருந்தும் தமிழ்த்தேசிய உணர்வுகள் அற்ற மரக்கட்டைகளாக தமிழினம் மாற்றப் படுவது நிச்சயமாகும்.
இதற்கு உதாரணமாக யாழ்மாவட்டத்துக்கு அடிக்கடி போய்வரும் ஜனாதிபதியும், பிரதம ரும் அபிவிருத்தி திட்டங்களை மட்டும் ஆரம்பித்து பொருளாதாரம் தொடர்பாக மட்டும் உரையாடிச் செல்கின்றனர்.
இனப்பிரச்சனை தொடர்பாகவோ, இனப் படுகொலை தொடர்பாகவோ அவர்களால் வாய் திறக்க முடியவில்லை. ஆளும் தரப்பு தேசிய மக்கள் சக்தி அரசில் உள்ளவர்கள் அப்படி இருந்தாலும் எதிர்கட்சி தலைவராக உள்ள சஜீத் பிரமதாசாவும் தமிழ் மக்கள் தொடர்பாக ஏன் செம்மணி புதை குழி தொடர்பாக இதுவரை அவரும் வாயே திறக்கவில்லை.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை தோற்கடிக்க கருவியாக தமிழரசுக்கட்சியில் சிலர் அவரை பாவிந்தனர் அந்த நன்றிக்காகவது சஜீத் தமிழ் மக்கள் தொடர்பாக எதுவும் பேசாமல் தமது சிங்கள இன வாதத்தை நிருபித்து விட்டார். எனவே 38வது ஆண்டு தியாகி திலீப னுக்கு வணக்கம் செலுத்தும் தமிழ் மக்கள் அவர் கூறிய மக்கள் புரட்சியினை செயல் வடிவம் கொடுப் பதே அவருக்கு உண்மையாக நாம் செலுத்தும் அஞ்சலியாகும்.