செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடையாளம் காணப்படும் மனித புதைகுழிகளுக்கும், இனப்படுகொலைக்கும், சர்வதேச நீதி கோரிய கையொழுத்து போராட்டம் மட்டக்களப்பில் இன்று (04) ஆரம்பிக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்திபூங்காவில் இந்த கையொழுத்துப் போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்தநிலையில், குறித்த போராட்டத்துக்கு ஆதரவு வழங்கவேண்டுமென தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
இந்த கையொழுத்து போராட்டம் கடந்த மாதம் 29 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றது. இந்தநிலையில், கிழக்கில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தப் போராட்டம், தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தின் கல்முனை நகர் பகுதியிலும் முன்னெடுக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நாளை (05) திருகோணமலை மாவட்டத்தில், சிவன்கோவிலுக்கு அருகில் ஆரம்பித்து முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.