பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும், அதனை மாற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அத்துடன், தமது கட்சியின் அரசியல் எழுச்சியை தடைசெய்ய வேண்டும் எனும் நோக்கிலேயே, நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்பட்டதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் தங்களது தரப்பினர் நன்கு அறிந்துள்ள நிலையில், அந்தச் சட்டத்தை நீக்குவதே அரசின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, முல்லைத்தீவு ஊடகவியலாளர் குமணன் விசாரணைக்கு அழைக்கப்பட்டமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அந்த விடயம் தொடர்பில் தாம் எதனையும் அறிந்திருக்கவில்லை எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.