மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரியின் மரணத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறி, பணி நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர் ஒருவர் உள்ளிட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மரியராஜ் சிந்துஜா, கடந்த வருடம் ஜூலை 28 திகதி உயிரிழந்தார்.
மருத்துவர்களின் கவனயீனத்தால் ஏற்பட்ட அதீத இரத்தப்போக்கு காரணமாக குறித்த இளம் தாயின் மரணம் சம்பவித்துள்ளதாக மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.
இந்த நிலையில் கடமையில் இருந்த மருத்துவர் உள்ளடங்களாக இரண்டு தாதியர்கள் மற்றும் இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்தநிலையில் குறித்த ஐவரில் தாதியர் ஒருவரும், இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்களும் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, அவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த மூவரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.