யாழ். அரியாலை செம்மணியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி பகுதியில் இன்று ஸ்கான் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
செம்மணி புதைகுழிகளில் நேற்று வரை 130 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 120 எலும்புக்கூடுகள் புதைகுழிகளிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இந்தப் புதைகுழிகளின் அருகே வேறு மனித புதைகுழிகள் இருக்கின்றனவா? என்று ஆராய ஸ்கான் பரிசோதனை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.