அமெரிக்காவும் பாகிஸ்தானும் உடன்பாடு – ஆபத்தில் இந்தியா

அமெரிக்காவும் பாகிஸ்தா னும் ஒரு எரிபொருள் அகழ்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன, அதில் வொஷிங்டன் இஸ்லாமாபாத்தின் “பெரிய எண் ணெய் படிமங்களை” மேம்படுத்த உதவும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை(30) தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் சமூக ஊடக தளமான ட்ரூத் தளத்தில், ரஷ்யாவுடனான அதன் வர்த்தக மற்றும் பாதுகாப்பு உறவுகளுக்கு பதிலடியாக இந்தியா மீது 25% வரிகளையும் அபராதங்களையும் விதிப்பதாக அவர் கூறிய சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
நாங்கள் பாகிஸ்தான் நாட்டுடன் ஒரு ஒப்பந்தத்தை முடித்துள்ளோம், இதன் மூலம் பாகிஸ் தானும் அமெரிக்காவும் தங்கள் மிகப்பெரிய எண்ணெய் படிமங்களை அகழ்வதில் இணைந்து செயல்படும். இந்த கூட்டணியை வழிநடத்தும் எண்ணெய் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டிருக்கின்றோம். யாருக்குத் தெரியும், ஒருவேளை அவர்கள் ஒரு நாள் இந்தியாவுக்கு எண்ணெய் விற்பனை செய்வார்கள்! என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க அமெரிக்க-பாகிஸ்தான் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தலைமைப் பங்காற்றியதற்காக ஜனாதிபதி ட்ரம்பிற்கு எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மைல்கல்லான ஒப்பந்தம் எங்கள் வளர்ந்து வரும் ஒத்துழைப்பை மேம்படுத்தும், இதனால் வரும் நாட்களில் எங்கள் நீடித்த கூட்டாண்மையின் எல்லைகளை விரிவுபடுத்தும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். வர்த்தக ஒப்பந்தம் குறித்த எந்த குறிப்பிட்ட விவரங்களையும் ஷெரீப் வெளியிட வில்லை.
ஏப்ரல் மாதத்தில், உலகெங்கிலும் உள்ள நாடுகள் மீது ‘விடுதலை தின’ வரிகளை டிரம்ப் அறிவித்திருந்தார். அதில் அமெரிக்காவிற்கான பாகிஸ்தான் ஏற்றுமதிக்கு 29% வரி விதிக்கப் பட்டிருந்தது. இருப்பினும், அவை ஜூலை 31 வரை நிறுத்தி வைக்கப்பட்டன.
பாகிஸ்தான் அதிகாரிகள் சமீபத்தில் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்தனர்; வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் கடந்த வாரம் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவை சந்தித்தார். சந்திப்புக்குப் பிறகு, அமெரிக்காவும் பாகிஸ்தானும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு “மிக நெருக்கமாக” இருப்பதாக டார் தெரிவித்திருந்தார். அமெரிக்க வர்த்தக பிரதிநிதியின் 2024 தரவுகளின்படி, பாகிஸ் தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகம் 7.3 பில்லியன் டொலர்களாகும்.