மாவடிமுன்மாரியில் கொட்டும் மழையிலும் மாவீரர் தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன

234
132 Views

தமிழர்கள் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக ஆயுதம் ஏந்தி போராடி இந்த மண்ணில் வதைகளான மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வுகள் வடகிழக்கு எங்கும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொட்டும் மழையிலும் மாவீரர் தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

மட்டக்களப்பு, படுவான்கரையில் உள்ள மாவடிமுன்மாரியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாலை உணர்வுபூர்வமாக மாவீரர் தின நிகழ்வுகள் நடைபெற்றன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியதேந்திரன் தலைமையில் இந்த நிகழ்வு கொட்டும் மழையிலும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

பிரதான ஈகச்சுடர் மாவீரர் ஒருவரின் தாயாரினால் ஏற்றப்பட்டு பின்னர் உயிர்நீர்த்த மாவீரர்களின் உறவுகளினால் ஈகச்சுடர்கள் ஏற்றப்பட்டு கண்ணீர்மழைக்கு மத்தியில் மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாவீரர்களின் உறவினர்கள், முன்னாள் போராளிகள், அரசியல்வாதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here