இந்த ஆண்டில் கடந்த 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1 274 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன என்று காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த வீதி விபத்துகளில் 1351 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் ஆயிரத்து 166 வீதிவிபத்துகள் பதிவாகியிருந்ததுடன், அவற்றில் ஆயிரத்து 222 பேர் உயிரிழந்திருந்தனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அதிகளவான வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன என்று காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.