ஐ நா மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டர்க் கருத்து ஈழத்தமிழர்களுக்கு ஏமாற்றம்: பா.அரியநேத்திரன்

ஐநா மனித உரிமை ஆணையாளர் வொல்கர் ரேக் இலங்கை வருகையில் தமிழ் மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர். செம்மணியில் அவர் நேரில் சென்று பார்த்தபோது அங்கு கூறிய கருத்து தமிழர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தபோதும் மறுநாள் ஜனாதிபதி அநுரவுடனான மறுநாள் சந்திப்பில் அவர் கூறிய கருத்து தமிழர்களுக்கு வேதனையை கொடுத்ததாகவே காணலாம்.
மறக்கப்பட முடியாத ஒரு கடந்த காலம் செம்மணியில் புலப்படுவதால் அந்த இடத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வுகளுக்கு அனைத்துலக தடயவியலாளர்களின் பிரசன்னம் தேவையென கடந்த (25/06/2025) செம்மணியில் வைத்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வொல்கர் ரேக் தெரிவித்திருந்தார்.
இது சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களின் உதிரப் பழிசார்ந்த சர்வதேச அழுத்தத்தைக் குறைப்பதற்காக நகர்த்தும் புதிய தந்திரங்களுக்கு ஒரு பாதக செய்தியை வழங்கியுள்ளது. எதிர்வரும் செப்டெம்பரில் ஐ.நா மனித உரிமைப்பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானகரமான ஒரு நிகழ்ச்சி நிரல் எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் இந்த நிகழ்ச்சி நிரலை ஜெனிவாவில் இருந்து அகற்ற அநுரகுமார திசாநாயக்கா அரசாங்கம் முயற்சி களை மேற்கொள்கிறது.
\இந்த நிலையில் அகாலமாக குரோதத்துடன் கொன்று புதைக்கப்பட்ட தமிழர்களின் உடல்கள் அடங்கியுள்ள செம்மணிக்கு சென்று மலர்தூவி அஞ்சலித்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர், செம்மணி போல அட்டூழியங்களால் உருவாக்கப்பட்ட இடங்களை தடயவியல் நிபுணத்துவம் கொண்ட சுயாதீன நிபுணர்களேஅகழ்வு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டமை சிறிலங்கா அரசாங்கங்கள் தொடர்ந்தும் நிராகரித்துவரும் அனைத்துலக விசாரணைப்பொறி முறையின் அவசியத்தையும் எழுப்பியிருந்ததுடன் அவர் கூறிய கருத்து ஓரளவு தமிழர்களுக்கு திருப்தியாகவே தென்பட்டது. ஆனால் (25/06/2025) ல் யாழ்ப்பாணத்தில் இப்படி கூறிய ஐநா மனித உரிமை ஆணையாளர் வொல்கர் ரேக் மறுநாள் (26/06/2025)ல் கொழும்பில் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவுடனான சந்திப்பின்போது செம்மணியில் கூறிய கருத்துக்கு எதிர்மறையாக அமைந்துள்ளது. அதாவது உள்நாட்டு பொறிமுறையை இலங்கை நிறுவ வேண்டும் எனவும், அது சர்வதேச விதிமுறைகளுடன் ஒத்துப்போகவேண்டும் எனவும் கூறிச்சென்றுள்ளார். சர்வதேச விதிமுறை என்ன என்பதே இலங்கை ஆட்சியாளர்களுக்கு இதுவரை தெரியாது.
செம்மணியில் “அணையாதீபம்” போராட்டத்தி லும், திருகோணமலையில் இடம்பெற்ற கவன ஈர்ப்பிலும் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் கேட்டதெல்லாம் சர்வதேச விசாரணைக்கு ஒத்துழையுங்கள் என்பதே.
மிகவும் கரிசனையாகவும் அமைதியாகவும் தமிழ்மக்களைடைய உணர்வுகளை நேரடியாக செவி மடுத்துவிட்டு அவர் கொழும்பு சென்றார்.
அதேவேளை சகல தமிழ் அமைப்புகள், யாழ் பல்கலைக்கழக மாணவர்அமைப்பு, தமிழ்தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்த்தேசிய கட்சிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், தமிழ் வர்த்தக சங்கங்கள், முன்னாள் போராளிகள், உலகத்தமிழர்கள் எல்லோரினதும் ஒற்றைச்சொல் சர்வதேச விசாரணை அப்படியாக பலரின் கோரிக்கைகளை செவிமடுத்தும் உள் நாட்டு பொறிமுறையை மீண்டும் இலங்கை ஜனாதிபதி அநுரவுக்கு வலியுறுத்தியுள்ளதை பார்த்தால் கடந்த 16, வருடங்களாக அனைத்து இராஜதந்திரிகளும் கூறுவதையே  ஐநா மனித உரிமை ஆணையாளர் வொல்கர் ரேக் இலங்கையில் மூன்று நாட்கள் தங்கி இருந்தும் தமிழர்களின் உணர்வுகளை உதாசீனம் செய்து இலங்கையை மீண்டும் பிணை எடுத்துள்ளார் என்றே எண்ணத்தோன்றுகிறது.
எதிர்வரும் செப்டம்பரில் ஜெனிவாவில் ஐநா மனித உரிமைப்பேரவையின் 59, வது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விடயம் எந்தளவில் ஈழத்தமிழர்களுக்கு சாதக மாக மாறும் என்பதில் பலத்த சந்தேகம் உண்டு.
16, வருடங்களாக புலம்பெயர் தமிழ் உறவுகள் தொடர்ச்சியாக நடத்தும் கவன ஈர்ப்பு போராட் டங்கள், ஈழத்தமிழர்கள் இலங்கையில் நடத்தும் அனைத்து போராட்டங்கள் எல்லாம் இலங்கை பொறுப்பு கூறவேண்டும் என கேட்கவில்லை, இலங்கை அரசில் நம்பிக்கை இல்லை சர்வதேச பொறிமுறை, இனப்படுகொலைக்கான சர்வதே விசாரணைமட்டுமே வேண்டும் என்பதையே வலியுறுத்தி வரும் நிலையில் ஐநா மனித உரிமை ஆணையாளர் வொல்கர் ரேக் இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பில் உள்நாட்டு பொறிமுறையை இலங்கை நிறுவ வேண்டும் என கூறிவிட்டு சென்றுள்ளமை மிகுந்த ஏமாற் றத்தை தமிழ்மக்களுக்கு தந்துள்ளது என்பதே உண்மை.