இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்காவின் மோதல்கள், பிராந்திய மோதலை உலகளாவிய ஒன்றாக மாற்றக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையை பொறுத்தவரை, இதன் விளைவு நீண்டகால பொருளாதார மற்றும் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் அச்சத்தை வெளியிட்டுள்ளனர்.
பல தசாப்தங்களாக இலங்கை, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரண்டு நாடுகளுடனும் நட்புறவை கொண்டுள்ளது. இரண்டு நாடுகளும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின் போது இலங்கைக்கு உதவியிருந்தன.
இந்தநிலையில் இன்றும் இலங்கை, இரண்டு நாடுகளுடனும் முக்கிய உறவுகளைத் தொடர்ந்து பராமரித்து வருகிறது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இஸ்ரேலில் பணிபுரிகின்றனர்.
ஈரானுக்கு இலங்கையில் இருந்து தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகிறது.
எனினும், குறித்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான போர் காரணமாக, இலங்கைக்கு பாரிய பொருளாதார தாக்கம் ஏற்படக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்
உலகளாவிய எண்ணெய் விலை அதிகரிக்கும் போது, அதுவும், இலங்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
இந்தநிலையில், பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வரும் இலங்கைக்கு ஈரான்- இஸ்ரேல் போர் தாக்கத்தை ஏற்படுத்தும் போராகவே அமைந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.