ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக்,(Volker Türk) இலங்கை வரும்போது, ஏற்கனவே திட்டமிடப்பட்ட சந்திப்புக்களுக்கு மேலதிகமான நிகழ்ச்சித்திட்டங்களும், உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதன்படி, தமது நான்கு நாள் பயணத்தின் இறுதி நாட்களில் அவர் கொழும்பிலும் சமூக ஆர்வலர்களை சந்திக்கவுள்ளார். அத்துடன் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தை சந்தித்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணையின் முன்னேற்றத்தையும் மதிப்பீடு செய்யவுள்ளார்.
இறுதியாக நாட்டில் இருந்து புறப்படும் முன்னர் செய்தியாளர்கள் சந்திப்பையும் அவர் நடத்தவுள்ளார்.
இந்தநிலையில், கடந்த கால மனித உரிமைகள் பிரச்சினைகளைக் கையாள்வதில் அரசாங்கம் தமது நேர்மையையும், நாட்டில் நல்லிணக்கத்திற்கான அதன் உறுதிப்பாட்டையும் நிரூபிக்க விரும்புவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
எனவே, வொல்கர் ரெக்குக்கு செம்மணி புதைகுழியை பார்வையிடுவது உள்ளிட்ட விடயங்களுக்கு இலங்கையில் தடையற்ற அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.