இலங்கையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாதென அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
ஈரான், இஸ்ரேல் யுத்தம் காரணமாக எரிபொருளுக்கு பற்றாக்குறை ஏற்பட போவதாக செய்திகள் வெளியாகுவது குறித்து மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது. அதனால் மக்கள் பீதியடைந்து எரிபொருளை சேமித்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை. எரிபொருள் விநியோகத்தை சீராக அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.