வவுனியாவடக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட தமிழர்க ளின் பூர்வீக கல்மடுக் குளத்தையும், அதன்கீழான வயல்நிலங்களையும் விடுவிப்புச்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா மாவட்ட அபி விருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலை வரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பி
னர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தி யுள்ளார்.
அத்தோடு தமிழ்மக்கள் நீண்டகால இடப்பெயர்வைச் சந்தித்த இடங்கள், தற்போது பயன்பாடின்றி பற்றைக்காடுகளாகக் காணப்படுகின்றபோது, அந்தஇடங்களை வனப் பகுதியாகக் கருதி வனவளத் திணைக்களம் ஆக்கிரமிப்புச்செய்யும் செயற் பாட்டிற் கும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது தனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக் கையில், கல்மடுக்குளம் என்றொரு குளம் இருப்பின், அக்குளத்தின்கீழ் மக்களுக்கு வயல்காணிகள் கட்டாயம் இருந்திருக்கும். எனவே அக்குளத்தின் கீழ் மக்களுக்கு வயல் காணிகள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். இவ் வாறிருக்கும்போது வனவளத்திணைக்களம் மக்களுக்குரிய வயல் காணிகளை பகிர்ந்தளிக்கமுடியாது எனக்கூறு வதை ஏற்றுக்கொள்ள முடியாது. என்றார்.
இந்நிலையில் வனவளத்திணைக்கள அதிகாரி இதன்போது பதிலளிக்கையில், கல்மடுக்குளமெனவனவளத் திணைக்களத்தால் அடை யாளப்படுத்தப்பட்டுள்ளபிரதேசம் நடுக்காட்டிற் குள், ஐந்துகிலோ மீற்றர் தூரத்திலேயே குறித்த குளம் காணப்படுகின்றது. அந்தவகையில் அக் குளம் நடுக்காட்டிற்குள் காணப் படுவதால், அது வனமாக பாதுகாக்கப்படுவதால் அதனைவிடுவித்துக் கொடுக்கமுடியாதநிலை காணப் படுவதாகத் தெரிவித்தார்.
இதன்போது வனவளத்திணைக்கள அதிகாரியின் இக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதெனத் தெரிவித்த ரவிகரன், கடந்தகால அசாதாரண சூழ்நிலைகாரணமாக குறித்த பகுதி யில் குடியிருந்த, விவசாய நடவடிக் கைகளில் ஈடுபட்ட தமிழ் மக்கள் குறித்த பகுதி களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
இவ்வாறு இடப்பெயர்வைச் சந்தி த்த மக்கள் அவர்களுடைய பகுதிகளில் மீளக் குடியமர்த்தப் படாதநிலை காணப்படுகின்றது. அத்தோடு அவர்கள் விவசாய நடவடிக்கைக்காகப் பயன்படுத்திய குளங்களும், குளங்களுக்குக் கீழான வயல்நிலங்களும் விடுவிக்கப்படாத நிலையிலும் காணப்படுகின்றன.
இந்நிலையில் மக்கள் குடியிருந்த மற்றும், விவசாய நடவடிக்கைக்குப் பயன் படுத்திய நிலங்கள் பற்றைக் காடுகளாகக் காணப்படுகின் றன.
இவ்வாறு மக்கள் விவசாயத்திற்காக பயன்படுத்திய குளமும், வயற்காணிக ளும் நீண்டகாலமாக பயன்படுத்தாத நிலையில் பற்றைக்காடுகளாக காணப்படும்போது, குறித்தபகுதியை வனப்பகுதி எனக் கூறிக்கொண்டு
வனவளத் திணைக்களம் விடுவிப்புச் செய்யாமல் தொடர்ச்சியாக ஆக் கிரமித்து வைத்திருப் பது நியாயமற்ற செயல்பாடு என்றார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நாடாளு மன்ற உறுப்பினர், குறித்த கல்மடுக்குளம் என்ற பகுதியில் மக்களால் முன்பு விவ சாயம் செய்யப்பட்ட மையினால்தால் தற்போதும் கமநல அபி விருத்தி திணைக்களத்தில் குறித்த குளம் தொடர்பான பதிவுகள் காணப் படுவதாகவும் சுட்டிக் காட்டினார். எனவே குறித்த காணிகளை அரசாங்கம் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டு மெனத் தெரிவித்தார். அதைவிடுத்து இவ்வாறாக திணைக்களங்கள் மக்களின் காணிகளை தொடர்ந்தும் அபகரிப்புச் செய்துவைத்திருந்தால் மக்கள் எங்கே செல்வார்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
கடந்த காலங்களில் முல்லைத்தீவு, வவு னியா, மன்னார், கிளிநொச்சிஎன பாரிய அளவில் மக்களால் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு, நெல் வடக்கிலிருந்து தென்பகுதிக்கு ஏற்றுமதி செய்த வரலாறுகளே காணப்பட்டன. இவ்வாறு மக்களால் நெற்செய்கைக்காக பயன்படுத்தப்பட்ட பெருமளவான காணிகளை அரச திணைக்களங்கள் ஆக்கிரமித்துள்ள நிலையே காணப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது தெரிவித்தார்.
அத்தோடு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும்,பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க இந்த விடயத் தில் கூடுதல் கவனமெடுக்க வேண்டுமென வலியுறுத்திய ரவிகரன், அரசதிணைக்களங்களால் அபகரிக்கப்பட்டுள்ள மக்களின் குடியிருப்பு மற்றும், விவசாயக்காணிகளை விடுவிப்புச் செய் வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டு மெனவும் கோரிக்கை முன்வைத்தார்.
அதேவேளை கல்மடுக்குளத்தின்கீழ் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு விண்ணப் பித்தவர்களின் தரவுகளையும், அங்கு ஏற்கனவே மக்கள் பயிற்ச்செய்கை மேற்கொண்டமைக்கான ஆதாரங்களையும் வவுனியா வடக்கு பிரதேச செயலரிடம் சமர்ப்பிக்குமாறு கமநல அபி விருத்தித் திணைக்கள உத்தியோகத்தரிடம் ரவிகரன் இதன்போது வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.