சுற்றுச்சூழல் தினத்திலே நிலத்தை சுத்தம் செய்யும் அரசாங்கம் கடலிலே சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகள் வடக்கு கடல் பாதிக்கப்படுவதாக வட மாகாண கடல் தொழில் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (05) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் தினம் என்பதால் நிலத்திலே காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் பொலித்தீன் அகற்றும் பணி யாழ் மாவட்டத்திலும் ஏனைய பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஆனால் கடலிலே காணப்படும் சட்ட விரோத கடல் அட்டை பண்ணைகள் மற்றும் சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை அகற்றாமல் அதனை மீன்களும் உண்டு அதை நாமும் உண்டு பல்வேறு நோய்களுக்கு வழி வகுக்கும் இந்த செயற்பாட்டை தடை செய்யாமல் இருப்பது கவலையளிக்கிறது.
பருத்தித்தீவிலே அமைக்கப்பட்ட சீன அரசாங்கத்தின் கடல் அட்டைப் பண்ணையில் பல்வேறு பிளாஸ்டிக் கழிவுகள் காணப்படுகின்றன அவை அகற்றப்படவில்லை.
இதற்கு தற்போது உள்ள அரசாங்கம் தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.