தேசிய இடமாற்றக் கொள்கையை நடைமுறைப்படுத்தக்கோரி இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தினரால் யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ‘எங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்!’, ‘வெளிமாகாணம் என்ன வேறு ‘நாடா!’, ‘ஆசிரியர் இடமாற்றம் மூலம் குடும்பத்தை சிதைக்காதே!’, ‘சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தில் ஆசிரியர்களின் அவர்களின் உறவினர்களின் மருத்துவ சான்றிதழைக் கருத்தில் கொள்!’, ‘இடமாற்றக் கடிதத்தில் காலத்தை வரையறை செய்!’ ஆகிய கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கம் சார்பாக ஆறு பிரதிநிதிகள் ஆளுநரைச் சந்தித்து மனுவொன்றைக் கையளித்தனர் .