இந்திய பாகிஸ்தான் போர் நிறுத்தம் – மீண்டும் உறுதிப்படுத்திய அமெரிக்கா

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக் கும் இடையிலான போர் நிறுத்தம் தமது வர்த்தக சலுகையால் எற்பட்டது என அமெரிக்கா நீதி மன்றத்தில் வழங்கிய ஆவணத்தில் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனா ல்ட் ட்றம்பின் தலையீட்டினால் தான் தென்னாசிய பிராந்தியத்
தின் இரு பெரும் அணுவாயுத நாடுகளுக்கு இடையில் ஒரு போர் நிறுத்தம் கொண்டுவரப் பட்டதாகவும் அதற்கு அமெரிக்கா இரு நாடுகளுக்கும் அமெரிக்காவு டன் வர்த்தகம் செய்வதற்கான சலுகையை வழங்கியதாகவும் அமெரிக்காவின் வர்த்தகத்துறை செயலாளர் ஹொவாட் லுற்னிக் இந்த வாரம் தெரிவித்துள்ளார்.
தென்னாசிய பிராந்தியத்தில் ஒரு முழு அளவிலான போர் ஏற்படுவதை தடுத்ததில் ட்றம்பின் பங்கு முக்கியமானது. நான்கு நாட்கள் மிகவும் மோசமாக இடம் பெற்ற போரை அமெரிக்கா நிறுத்தி யிருந்தது. மே 10 ஆம் நாள் போர் நிறுத்தத்திற்கு இரு நாடுகளும் சம்மதித்துள்ளதாக ட்றம்பே முதலில் அறிவித் திருந்தார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் அமெரிக்காவின் தலையீட்டை இந்தியாவின் வெளிவிவகார அமைச்சகம் தொடர்ந்து மறுத்து வருகின்றது. அமெரிக்காவை நாம் கேட்கவுமில்லை, அமெரிக்கா இந்த போர் நிறுத்தத்தில் தொடர்புபடவும் இல்லை என இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி இந்திய நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இரு நாடுகளின் படை அதிகாரிகளுக்கு இடையிலான தொடர்பினால் மட்டுமே போர் நிறுத்தம் ஏற்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கரும் இந்த வாரம் ஜேர்மன் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார். எனினும் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் தற்போது வொசிங்டனில் தங்கியுள்ள சமயம் அமெரிக்கா மீண்டும் போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்தியுள் ளது இங்கு குறிப்பிடத்தக்கது.