2009 இல் இலங்கை விவகாரத்தில் உரிய தருணத்தில் ஐ.நா செயற்படவில்லை: டொம் பிளெச்சர்

இலங்கை ருவாண்டா ஸ்ரெப்ரெனிகாவில் நாங்கள் (ஐநா) உரிய தருணத்தில் செயற்படவில்லை உரிய தருணத்தில் எச்சரிக்கை விடுக்கவில்லை என  உலகம் பின்னர் தெரிவித்தது என ஐக்கியநாடுகளின் மனிதாபிமான விவகாரங்களிற்கான தலைவர் டொம் பிளெச்சர் பிபிசி ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கான மே 14ம் திகதி உரையில் பிளெச்சர் காசாவில் இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதற்கு பாதுகாப்பு சபை முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அவர் ஏன் இவ்வாறான வேண்டுகோளை விடுத்தார் என்ற பிபிசி செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்துள்ள பிளெச்சர் காசாவில் பலவந்தமாக இடம்பெயரச்செய்தல் குறித்து தகவல்கள் கிடைக்கின்றன பட்டினி குறித்து தகவல்கள் கிடைக்கின்றன சித்திரவதைகள் பெருமளவு உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் கிடைக்கின்றன என தெரிவித்துள்ளார்.

இலங்கை ருவாண்டா ஸ்ரெப்ரெனிகாவில் நாங்கள் ஐநா உரிய தருணத்தில் செயற்படவில்லை உரிய தருணத்தில் எச்சரிக்கை விடுக்கவில்லை என  உலகம் பின்னர் தெரிவித்தது என குறிப்பிட்டுள்ள அவர் அதன் காரணமாகவே ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கும் உலகிற்கும் நான் வேண்டுகோள் விடுத்தேன் எனக்குறிப்பிட்டுள்ளார்.