குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட இரு விவசாயிகளையும் ஜூன் 7ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதவான் இன்றைய தினம் (29) உத்தரவிட்டுள்ளார்.
குமுழமுனை தண்ணிமுறிப்பு குளத்தின் கீழான நீர்ப்பாசனத்தின் ஊடாக விவசாயம் செய்யும் நோக்கில் குறித்த காணியின் உரிமையாளர் தனது பணியாட்கள் மூலம் உழவு இயந்திரத்தின் உதவியுடன் அங்கு விவசாய நடவடிக்கை முன்னெடுத்திருந்ததார்.
குருந்தூர் மலை பகுதியில் விவசாயிகள் உழவு நடவடிக்கையை செய்து கொண்டிருந்த போது தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாகக் கூறி, அவர்களில் இரண்டு விவசாயிகளுக்கு எதிராக நீதிமன்றில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இருவரையும் எதிர்வரும் ஜூன் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அவர்கள் சட்டவிரோத முறையில் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.



