வங்காலைக் கிராமமே அழிவடையும் ஆபத்தில்; ரவிகரன் எம்.பி. எச்சரிக்கை

மன்னார் நானாட்டான் பிரதேசசெயலர் பிரிவுக்குட்பட்ட வங்காலைப் பகுதியில் ஏற்பட்டுள்ள கடலரிப்புக் காரணமாக, வங்காலைக் கிராமமே காணாமற் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

மன்னார் வங்காலைப் பகுதியில் கடல ரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின் றது. கடல்நீர் நகருக்குள் உட்புகுவதால் வங்காலையின் இருப்பு கேள்விக்கு உட்பட்டுள்ளது. வங்காலையில் ஒரு தடுப்பணையை அமைக்குமாறு அந்தப் பகுதி மக்கள் நீண்ட நாள்களாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப் பாக வங்காலை – முத்தரிப்புத்துறை அழிவின் விளிம்பில் உள்ளது. அந்தப் பகுதி மக்களும் பெரும் ஆபத்தை எதிர் கொண்டுள்ளனர். ஆனால், முத்தரிப்புத்துறை கடற்படை முகாமுக்கு அருகில் தடுப்பணையொன்று அமைத் துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு யார் நிதியொதுக்கீடு செய்தது? கடற்படையி னரைப் பாதுகாக்க தடுப்பணை அமைக்க முடியுமென்றால், மக்களைப் பாதுகாக்க அமைக்க முடியாதா? – என்றார்.