கடற்படையினரால் தாக்கப்பட்டதாக கூறப்படும், கிளிநொச்சி – கண்டாவளை பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
கிளிநொச்சி – கண்டாவளை பேப்பாறைப்பிட்டிக்கு கடற்றொழிலுக்கு சென்ற குறித்த நபர் கடந்த 21ஆம் திகதி கடற்படையைச் சேர்ந்த சிலரால் கடுமையாக தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த தங்களுக்கு கிடைத்த தகவலுக்கமைய, சம்பவ இடத்துக்கு சென்ற தருமபுரம் பொலிஸார் குறித்த நபரை மீட்டு தரும்புரம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். பின்னர் அவர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான முறைப்பாட்டை தருமபுரம் பொலிஸார், ஏற்க மறுத்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட நபரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த நபர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.